பள்ளி, கல்லூரியிலோ அல்லது பணியிடங்களிலோ விடுமுறை அல்லது தாமதமாக வருவது குறித்த கேள்விக்கு அளிக்கப்படும் பதில்கள் சில சமயங்களில் நகைச்சுவையாக இருக்கும். அது சமூக வலைத் தளங்களிலும் வைரலாக பரவுவது வழக்கம்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் காவலர், தான் வேலைக்கு தாமதமாக வந்ததற்கான காரணம் பற்றி விளக்கி மேல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அவர் எழுதிய பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய தாமதத்திற்கு காரணமே அவருக்கு வரும் கனவுகள் தான்.

உத்தரபிரதேசத்தில் மீரட் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் காலை கூட்டத்திற்கு தாமதமாக வந்திருக்கிறார். இது பலமுறை தொடர்ந்து இருக்கிறது. அதற்கு, மேல் அதிகாரிகள் விளக்கம் கேட்டதற்கு தான் இந்த பதிலை அவர் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: இந்திய பெண்ணுக்கு தூக்கு; ஐக்கிய அமீரக அரசு அதிரடி நடவடிக்கை... கடைசி ஆசை - உருக்கமான காட்சி..!
தனக்கு வரும் கனவுகளின் தன்மையைப் பற்றி பகிர்ந்து கொண்ட அவருடைய கடிதம் இருண்ட ஒரு பக்கத்தையும் தொந்தரவான ஒரு திருப்பத்தையும் எடுத்துக்காட்டியது. கனவு இதுதான் ...
இரவில் தனது மனைவி அவருடைய கனவுகளில் தோன்றி மார்பின் மீது அமர்ந்து கொண்டு அவரைக் கொல்லும் நோக்கத்துடன் ரத்தத்தை குடிக்க முயற்சிப்பதாக (ரத்த காட்டேரி) அந்தக் கனவு வந்தது.
இது ஒரு முறை மட்டும் வரும் கனவு அல்ல; தொடர்ச்சியான இந்த கனவுகள் அவரை விழித்திருக்க வைத்து பகலில் செயல்படும் திறனை கடுமையாக பாதித்துவிட்டன. ஆனால் இந்த கனவுகள் ஒரு பகுதி மட்டுமே.. அதற்கு தீர்வாக மனச் சோர்வு மற்றும் எரிச்சலை போக்குவதற்கான மருந்துகளை அவர்கள் கொண்டதாகவும், இதனால் அவருடைய நிலைமை மேலும் சிக்கலாகி விட்டதாகவும், சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல இயலாமல் போய்விட்டது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார், அந்த போலீஸ் கான்ஸ்டபிள்.

அவருடைய தாயாரும் நரம்புக் கோளாறால் போராடி வருவது பற்றியும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே பலவீனமான அவருடைய மனநிலைக்கு இது இன்னும் கூடுதல் அடுத்ததை சேர்த்தது. ஆனால் அவருடைய கடிதத்தின் மிகவும் உருக்கமான பகுதி எதுவென்றால் வாழும் விருப்பத்தை இழந்து விட்டேன் என்று அவர் ஒப்புக்கொண்டது தான்.
இறுதியில் கடவுளின் பாதத்தில் என்னை சரணடைய விரும்பினேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தனது உணர்ச்சிகளின் வலியில் இருந்து அமைதி, விடுதலையை எதிர்பார்த்து தனது மேலதிகாரிகளிடம் ஆன்மீக வழிகாட்டுதல் கேட்டு தனது கடிதத்தை அவர் முடித்திருக்கிறார்.
அவருடைய இந்த வார்த்தைகள் நேர்மையானவை. மேலும் பலர் விவாதிக்க பயப்படும் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை இந்த கடிதம் வெளிப்படுத்தி இருக்கிறது.
தனது மேலதிகாரிகளுக்கு தனிப்பட்ட மற்றும் முறையான கடிதம் என்று கூறப்பட்ட கடிதம் விரைவில் வைரல் ஆகியது. கான்ஸ்டபிளின் ஆழ்ந்த, தனிப்பட்ட மற்றும் உணர்வு பூர்வமான வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி மக்களிடையே பச்சாதாபம், கவலை மற்றும் குழப்பம் கலந்த உணர்வை ஏற்படுத்தியது. இது போன்ற ஒரு தனிப்பட்ட விஷயம் பொதுவில் எப்படி முடிந்தது என்று பலரும் வியப்பு அடைந்தனர்.
கவனத்தை ஈர்த்த இந்த கடிதத்திற்கு அதிகாரிகள் விரைவாக பதில் அளித்தனர். கடிதத்தின் உள்ளடக்கங்கள் மற்றும் அது எவ்வாறு ஆன்லைனில் கசிந்தது என்பது குறித்தும் அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். என்ன நடந்தது என்பதை கண்டறிய முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக 44 வது பட்டாலியன் அதிகாரி சச்சீந்திர பட்டேல் கூறினார்.

இந்த வழக்கு ஒரு கான்ஸ்டபிளின் போராட்டத்திற்கு அப்பாற்பட்டது. குறிப்பாக சட்ட அமலாக்கம் போன்ற அதிக மன அழுத்த வேலைகளில் சிறந்த மனநல ஆதரவு தேவை என்பதற்கான விழிப்புணர்வை இது ஏற்படுத்தி இருக்கிறது.
அவருடைய இந்த கதை பல அர்த்தங்கள் கடமைகளுக்கு பின்னால் எதிர்கொள்ளும் மறைக்கப்பட்ட உணர்ச்சி பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. இது அவர்களின் வேலை மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது அவருடைய கூற்றுக்கள் முழுமையாக நிரூபிக்க பட்டாலும் நிரூபிக்ப்படாவிட்டாலும் பதில் என்னவோ வைரலானது.
மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்தை போலவே கவனத்திற்கும் தகுதியானது என்பதையும் காட்டுகிறது அவருடைய கடிதம். பல போர்கள் அமைதியாக நடத்தப்படுகின்றன என்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாகும் இது.
மேலும் புரிதல், ஆதரவு மற்றும் செயலுடன் அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய நேரம் இது" என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த செய்தியை முடித்து இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி தப்பி ஓட்டம்...தடுத்த கணவனுக்கு அடி, உதை!!