போலியான பாஸ்போர்ட் அல்லது விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தாலோ அல்லது தங்கி இருந்தாலோ 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய குடியேற்ற மசோதாவை இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய குடியேற்ற மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராவ் நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் தேதி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஹோட்டல் நிர்வாகம், கல்வி வழங்கும் நிர்வாகம், சிகிச்சை பெற்றால் மருத்துவமனை நிர்வாகம், நர்ஸிங் ஹோம் ஆகியவை தானாக முன்வந்து வெளிநாட்டினர் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
அப்போதுதான் விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.
இதையும் படிங்க: 100 நாட்கள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.. மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!

வெளிநாட்டினர் மற்றும் குடியேறிகள் ஆகியோரை 4 சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அதாவது பாஸ்போர்ட் சட்டம் 1920, வெளிநாட்டினர் பதிவேட்டுச் சட்டம் 1939, வெளிநாட்டினருக்கான சட்டம் 1946, குடியேற்றச் சட்டம் 2000 ஆகியவை கட்டுப்படுத்துகிறது. இந்த 4 சட்டங்களும் நீக்கப்பட்டு, புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். அதேசமயம், இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகள் தொடர்ந்து இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு சேர்க்கப்படும்.

உள்துறை அதிகாரிகள் கூறுகையில் “இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் தகுதியான பாஸ்போர்ட், விசாக்கள் மூலம் வர வேண்டும், வெளியேற வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தவர்களை அந்நாட்டுக்கு திருப்பவும் அதிகாரம் உண்டு. வெளிநாட்டினர் மருத்துவமனைகள், ஹாஸ்டல்கள், நர்சிங் ஹோம்கள், கல்விநிலையங்கள், பணியிடங்கள் ஆகியவற்றில் இருந்தால் அவர்கள் குறித்து நிர்வாகம் தானாகவே அரசிடம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்குள் வரும் விமானங்கள், கப்பல்கள் பயணிகள் குறித்த விவரங்களை துறைமுக நிர்வாகம் அல்லது விமாநிலையத்தில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்தவர்கள், போலி பாஸ்போர்ட், விசா மூலம் நாட்டுக்குள் வந்து தங்கியிருப்பவர்கள், விசா காலத்துக்கும் அதிகமாக தங்கியவர்கள் புதிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமலும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, வெளிநாட்டினர் மற்றும் குடியேற்றம் குறித்த முழுமையான விவரங்களை கவனிக்கும்.

ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டினர்இந்தியாவில் அதிகபட்சமாக 180 நாட்களுக்கு மேல்தங்க முடியாது. மாணவர்கள், மருத்துவ ஆய்வு, வேலைவாய்ப்பு, தொண்டு நிறுவனம், திட்டப்பணிகள் ஆகியவற்றுக்கு வெளிநாட்டினர் மண்டல பதிவு அதிகாரி அல்லது வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் இந்தியாவுக்குள் வந்த 14 நாட்கலுக்குள் பதிவு செய்ய வேண்டும். பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் வந்த 24 மணிநேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டினர் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் செல்ல சிறப்பு அனுமதி தேவை. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி 2023 ஏப்ரல் 1 முதல் 2024 ஏப்ரல் 1 வரை 98.40 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!