மதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் தொடங்கி உள்ளது. மல்லை சத்யா உடனான பனிப்போரால் கட்சிப் பதவியை துரை வைகோ ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில், துரை வைகோ- மல்லை சத்யா விவகாரத்தில் மதிமுக நிர்வாக குழு இன்று முக்கிய முடிவு எடுக்கிறது.

இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக அலுவலகத்திற்கு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யாவை அழைத்து தனியாக பேசியுள்ளார். அப்போது நீங்கள் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாக மல்லை சத்யா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தன்னை வைகோவின் சேனாதிபதி என்றும் வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம் என கூறியிருந்தார்.
ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதைப் போல வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம் எனக் கூறி இருந்தார். தன்னை விசுவாசி என்பதை சொல்லாமல் சொல்லிய மல்லை சத்யா, உங்கள் முடிவை ஏற்பதாக வைகோவிடம் கூறி இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சேனாதிபதி என விசுவாசம் காட்டிய அந்த 'ஒருவர்' ! விளாசிய துரை வைகோ!
இதையும் படிங்க: நான் வைகோவின் சேனாதிபதி! அவரு தான் இவரா? விசுவாசத்தை சூசகமாக சொன்ன மல்லை சத்யா...