விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார். பெரியார் பற்றிய சர்ச்சை கருத்துக்களால் தமிழகம் முழுவதும் சீமான் இமேஜ் டேமேஜ் ஆகி வரும் அதே சமயத்தில், மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு, ஆதவ் அர்ஜுனாவை உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை கட்சியில் சேர்த்தது, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் அடுத்தடுத்து சந்திப்பு என தமிழக வெற்றிக் கழகத்தை முழு வீச்சில் விஜய் வலுப்படுத்தி வருகிறார்.

மற்றொருபுறம் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் இருந்த ஏராளமான தம்பிகள் தவெகவிற்கு தாவி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் மீது கடும் அப்செட்டில் இருக்கும் சீமான், இன்று விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையிலான சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்திருந்தார். தனக்கு நிறைய மூளை இருப்பதாகவும், எங்கு யாரை நிற்கவைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என தனக்குத் தெரியும் என்றும் கூறிய சீமான், தன்னிடம் பணம் மட்டும் தான் இல்லை எனக்கூறினார். இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பிரச்சனை வெடித்திருக்காது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்? எத்தனை ஆறு, எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை சமூக மக்கள், அந்தந்த சமூக மக்களுக்கு இருக்கிற பிரச்சனை என்ன என்பதெல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? தெரியுமா சிலருக்கு உடலில் கொழுப்பு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சிலர் வசனம் சொல்லுவார்கள் உனக்கு வாய் கொழுப்பு அதிகம் என்று... இந்த கொழுப்பு அதிகம், அந்த கொழுப்பு அதிகம் என்பார்கள். அது மாதிரி இது பணக்கொழுப்பு” எனக்கூறினார்.
இதையும் படிங்க: பண கொழுப்பு அதிகம்... விஜய்க்கு சீமான் சொன்ன குட்டிக்கதை... என் கூட்டணி இவர்களுடன் மட்டும்தான்..!
சீமானின் இந்த பேச்சுக்கு தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நடைமுறை அரசியல் யதார்த்தம் சீமானுக்குப் புரியவில்லை என்றும், சமகால அரசியல் சூழலில் கட்சிகள் தேர்தல் வியூக வகுப்பாளர்களை நியமிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என சீமான் எத்தனை காலம் தான் கூறிக்கொண்டிருப்பார் என கேள்வி எழுப்பியுள்ள சம்பத் குமார், ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என வெளுத்து வாங்கியுள்ளார்.
எங்கள் தலைவர், அவர் உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து அவர் எப்படி வேண்டுமானலும் செலவு செய்வார். திரள் நிதி சேர்ந்து அடுத்தவர் பணத்தில் வாழும் உங்களுக்கு பேச என்ன அருகதை உள்ளது
முதல நாகரீகமா பேச கத்துகோங்க…@SeemanOfficial @Seeman4TN
Have some Dignity when speaking, always… pic.twitter.com/4HrXcXj0jz
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_CbeNorth) February 12, 2025
மற்றொருபுறம் தவெக கட்சியினர் நடத்தி வரும் சமூக வலைத்தள பக்கம் ஒன்றில், எங்கள் தலைவர், அவர் உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து அவர் எப்படி வேண்டுமானலும் செலவு செய்வார். திரள் நிதி சேர்ந்து அடுத்தவர் பணத்தில் வாழும் உங்களுக்கு பேச என்ன அருகதை உள்ளது என பதிவிட்டு, சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..!