இன்று நாடு முழுவதும் அம்பேத்கருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக சட்டசபையில் 13.04.2022 அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வடக்கே நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியை சமத்துவ நாளாக கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில ஏப்ரல் 14ஆம் தேதி ஆண்டுதோறும் சமத்துவ நாளாக கடைபிடித்து வருகிறது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, அம்பேத்கர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் சமத்துவ நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . சேலம் தொங்கு பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் வெண்கல சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத் சிலைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எவ்வித ஆர்ப்பாட்டமோ, தொண்டர்கள் படையோ இல்லாமல் இயல்பாகவும், அமைதியாகவும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான பெரியாருக்கு பனையூரில் உள்ள தனது அலுவலகத்திலேயே மரியாதை செலுத்தினார் விஜய். அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகராக வேண்டுமானால் விஜய் பொது வெளிக்கு வருவதைத் தவிர்க்கலாம், ஆனால் அரசியல் தலைவராக அவர் மக்களோடு, மக்களாக ஒன்றாக இணைய வேண்டும். இப்படி பனையூர் அலுவலக கேட்டிற்கு பின்னால் இருந்து கொண்டு அரசியல் செய்வது தமிழகத்திற்கு ஒத்து வராது என்றும், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை பனையூர் வெற்றிக் கழகம் என மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் விஜய் வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என விமர்சித்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசியல்வாதிகளுக்கே முன்னூதாரணமாக எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் அம்பேத்கருக்கு உரிய மரியாதையை செலுத்தியுள்ள விஜய்க்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.
pic.twitter.com/T2Qxhplwxx சென்னை பாலவாக்கத்தில் உள்ள நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 135வது பிறந்தநாள் விழா முன்னிட்டு #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!@TVKVijayHQ@BussyAnand#DrAmbedkar — TVK Dharmapuri West (@tvkdpiwest) April 14, 2025
இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!