நடிகை விஜயலெட்சுமி - சீமான் விவகாரம்தான் அரசியல் வட்டாரத்தில் பற்றி எரிந்து வருகிறது. நேற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி வெளியே வந்த பின்னால், விஜயலட்சுமியுடான தனது உறவு குறித்து கடுமையான வாதங்களை முன் வைத்து இருந்தார்...
இதற்கு பதிலடி கொடுத்துள்ள விஜயலட்சுமி, ''என்னதான் உன் பிரச்சினை என்று ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டுமாம்? சீமான் 2023ல் எதுக்கு நீ எனக்கு 50 ஆயிரம் போட்டாய். உன்னுடைய மதுரை செல்வம் இருக்கான் இல்லையா? ஒரு கோடி கொடுத்தேன் என்று எல்லாம் சொல்லி என் மானத்தை வாங்கினான் அல்லவா? அதை எல்லாம் எதற்கு பண்ணினாய் என்று நான் வழக்கு தொடரவா? நீ ஆம்பளையாக இருந்தால் எதற்கு மதுரை செல்வத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்? எதுக்கு மதுரை செல்வத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்?

நீ என்னமோ பிள்ளைகள் இருக்கிறார்கள், அசிங்கமாக இருக்கிறது என்கிறாய்..? அப்புறம் எதுக்குடா என்னிடம் வீடியோ வாங்கினீர்கள்? நீ வாங்கி வைப்பாய். நான் வாயை பொத்திக்கிட்டு இருக்கனுமா? அப்புறம் உங்க ஆட்கள் வந்து அதை வெளியிடுவேன் என்று மிரட்டுவார்கள். அதுக்காக நான் சாக வேண்டுமா?
இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!
நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? அநாகரீகமாக பேசாதே சீமான். அநாகரீகமாக பேசாதே... 2008ல் இருந்து உன்னிடம் ஆறு மாதம்தான் பழகினேனா? அப்புறம் எதுக்கு உன்னைப்பற்றி 2011-ல் வந்து புகார் கொடுத்தேன். 2011ல் வரை நீ செய்த அசிங்கத்துக்காகத்தான் நான் போட்ட துணியுடன் வந்து புகார் கொடுத்தேன். இந்த அசிங்கமா பேசுகிற வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதே.. நீ பேசுவதை விட நான் கேவலமாக பேசுவேன். சும்மா டிராமா போடாதே…

நேற்று வரை என்ன சொன்னாய்…? விஜயலட்சுமி என்றால் யார் என்றே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தாய். திமுக- காரர்கள் ஏன்கூட்டிட்டு வர சொன்னாய் திருப்பி நேற்றுதானே சொல்கிறாய் ஆமாம் நான் 50,000 கொடுத்தேன் என்று எதுக்கு மதுரை செல்லும் என்னிடம் வந்து வீடியோ வாங்கிக் கொண்டிருந்தான். எதுக்கு என் அக்காவிற்கு நீ வாழ்த்துக்கள் அனுப்பினாய். எதுக்கு என்னிடம் வந்து டார்ச்சர் செய்து கொண்டிருந்தாய். முதலில் ஐம்பதாயிரம் போட்டாய்... போட்டுவிட்டு ஏதோ மதுரை செல்வோம் என்னிடம் வந்து, அவர் உன் புருஷன் தானே... உன் புருஷன் தானே'' என்றெல்லாம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தான். முதலில் அதற்கு பதில் சொல். முதலில் எந்த பணமும் கொடுக்காமல் என்னிடம் வந்து 'பொண்டாட்டி' என்று வந்து எதற்கு பம்மினாய். அதற்கு பதில் சொல்லுடா.
அதையெல்லாம் விட்டுவிட்டு மீடியா முன்பு வந்து சீன் போட்டு கொண்டிருக்காதே. உன்னைப் போல ஒரு துப்புக் கெட்ட நாயிடம் வாழ்ந்தேன் பாரு. எனக்குத்தாண்டா கேவலம். நீ பெரிய ஆள் மாதிரி பேசாதே'' என வறுத்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் ஒரு வக்கிரவாதி... காங்கிரஸ் எம். பி.சுதா கடும் தாக்கு!