ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்திற்கு பெறப்பட்ட தடையை நீக்கி அந்த வழக்கை விரைந்து முடித்து தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இது நாள் வரை நியமிக்கப்படாத அறங்காவலர் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை திருப்போரூரில் உண்டியலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட செல்போன் விவகாரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: ‘அண்ணாமலையின் சாட்டையடி சிரிப்பா உங்களுக்கு தெரியுதா..?’கலாய்ப்பவர்களுக்கு பாஜக தொண்டர்களின் கசையடி..!