மேற்கு வங்காள மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் தனது பத்து வயது மகளுடன் தற்போது தனியாக தவித்து வருகிறார், கணவன். தங்கள் மகளின் கல்வி வசதி மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்துக்காக தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்கும்படி அவருடைய மனைவி மூளைச்சலவை செய்து இருக்கிறார்.
மனைவியின் வற்புறுத்தலை கேட்டு ஒரு வருட தேடலுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகத்தை விற்பதற்காக தொழிலதிபர் ஒருவரை அவர் கண்டறிந்தார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்கி விடும் என்றும் மகளின் கல்வி திருமணத்திற்கு இனி கவலை இல்லை என்றும் நிம்மதி அடைந்தார் அவர். சிறுநீரகத்தை 10 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை வீட்டிற்கு எடுத்து வந்தார்.

முகநூல் காதலால் வந்த வினை . ஆனால் மனைவியின் வற்புறுத்தலுக்கு பின்னால் இருந்த சதி திட்டம் கணவருக்கு தெரியாமல் போய்விட்டது. சிறுநீரகத்தை விற்பதற்காக கணவர் ஆட்களை தேடிக் கொண்டிருந்த போது அவருடைய மனைவி பாரக்பூரில் சுபாஷ் காலனியில் வகிக்கும் ரவிதாஸ் என்பவருடன் முகநூலில் நட்பாக பழகினார்.
இதையும் படிங்க: திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??
ஓவியரான ரவிதாஸ், முகநூல் நட்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடன் நெருக்கமான பழக்கத்தை தொடர்ந்தார். அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த நிலையில்தான், வீட்டில் கணவர் வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், மனைவி.
இதை அடுத்து கணவர் போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவருடைய மனைவி காதலன் ரவி தாஸுடன் போரக்ப்பூரில் கணவன் மனைவியாக குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்தது. பத்து வயது மகளுடன் வீட்டில் வறுமையில் வாடிக் கொண்டிருந்த கணவர் தனது குடும்பத்தினருடன் மனைவியின் புதிய வீட்டிற்கு சென்றார்.
ஆனால் வீட்டுக்குள் இருந்த மனைவியும் காதலனும் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். பின்னர் லேசாக கதவைத் திறந்தபடி "நீங்கள் செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள்; நான் உங்களுக்கு விவாகரத்து கடிதம் அனுப்பி வைக்கிறேன்" என்று அலட்சியமாக கூறிவிட்டு, கதவை ஓங்கி சாத்தி விட்டனர். மாமனார், மாமியார், கணவர், பிள்ளைகள் என அனைவரும் வேண்டுகோள் விடுத்தும் மனைவி வெளியே வரவில்லை.
கணவனின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் வற்புறுத்தலின் பெயரில் தான் மனைவி கணவரை சிறுநீரகத்தை விற்கச் சொல்லி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்