அமெரிக்க தமிழரான விவேக் ராமசாமியை ஓஹோயோ மாகாணத்தின் கவர்னர்ராக,போட்டியிட அதிகாரப்பூர்வமாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ராமசாமி. இவர் அமெரிக்காவில் குடியேறி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் அவருடைய இரு மகன்களில் ஒருவர்தான் விவேக் ராமசாமி.
கேரள தமிழரான இவர் அமெரிக்காவின் ஒஹோகியோ மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.
சிறுவயதில் இருந்தே மிகத்துடிப்பான நபராக வளர்ந்து வந்த விவேக் ராமசாமி, கல்லூரி முடிப்பதற்குள்ளே உள்ளாகவே வருமானத்தை ஈட்ட ஆரம்பித்துவிட்டார். தனது பயோடெக் கம்பெனி மூலமாக பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்தார் விவேக் ராமசாமி. உத்தரப்பிரதேசத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அபூர்வா திவாரி என்ற பெண்ணை மணந்த விவேக் ராமசாமிக்கு கார்த்திக், அர்ஜுன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழரான விவேக் ராமசாமியை சந்தித்த மோடி..! விரைவில் கவர்னராக வாழ்த்து!

சிறந்த ஞாபக சக்தி கொண்ட விவேக் ராமசாமி கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து களத்தில் குதித்தார். ஒரு கட்டத்தில் டொனால்ட் டிரம்ப்,ஜோ பைடன் இடையே போட்டி வலுப்பெற்ற நிலையில் விவேக் ராமசாமி போட்டியிலிருந்து விலகி டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்தார்.
ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு போட்டியாளராக மாறிய தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்க்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்தார். விவேக் ராமசாமியின் அனல் பறக்கும் பிரச்சாரம் டொனால்ட் ட்ரம்புக்கு பெரிய அளவில் இந்திய மக்களிடையேயும் மற்றவர்களிடமும் கை கொடுத்தது என்றே சொல்லலாம்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற உடனே அமெரிக்காவின் சக்தி வாய்ந்த துணை அமைப்பான DOGE தலைவர்களில் ஒருவராக எலன் மஸ்குடன் சேர்த்து விவேக் ராமசாமியையும் ரெனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற அன்று DOGE பதிவியிலிருந்து விலகிக் கொள்வதாக விவேக் ராமசாமி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தான் விவேக் ராமசாமி ஓஹோயோ மாகாண கவர்னராக போட்டியிடப் உள்ளார் என்ற செய்தியும் வெளியானது அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் வகையில் காட்சிகள் மாறி உள்ளன.
இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், விவேக்ராமசாமி ஓஹோயோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்,விவேக் ராமசாமி ஒரு சிறந்த மனிதர் இளைஞர் மிகவும் சக்தி வாய்ந்த சாதுரியமான நபர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் விவேக் ராமசாமி மிகவும் நல்ல மனிதர் அமெரிக்காவுக்காக உண்மையாக பாடுபடக் கூடியவர் எனவும் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்,நிச்சயம் இவர் ஓஹோயோ மாகாணத்தின் சிறந்த கவர்னராக பதவி வகிப்பார். எப்பொழுதும் மாகாணத்தை கைவிட மாட்டார், அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.. என டொனால்ட் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எலான் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப்