×
 

கார் ரேஸில் அடிதூள்.. தல அஜித் மூன்றாமிடம் பிடித்து சாதனை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் 991 பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அஜித் குமார் சினிமா நடிகர் என்பதைத் தாண்டி அவர் ஒரு கார் ரேஸ் பிரியர். சினிமாவில் நடிக்கும் நேரம் போக, பைக் மற்றும் கார் ரேஸில் பங்கேற்பதை அஜித்குமார் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது துபாயில்  நடைபெற்று வரும் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித்குமார் கலந்து கொண்டார். கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டத்தின் போது அஜித்குமார் சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. 

இதில் அஜித்குமாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ,  ஒளிப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இந்தப் போட்டியில் அஜித்குமார் அணி  3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த‌து.

D

இது குறித்து அஜித் குமாரின் மேலாளர்  சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " பிரேக் ஃபெயிலியர் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கு பிறகு என்ன கம்பேக். 991 பிரிவில் 3ஆவது இடம் மற்றும் ஜிடி4 பிரிவில்  கார் ரேஸில் அஜித் குமார் 3ஆவது இடம் பிடித்ததை அவருடன் இணைந்து அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் மாதவன் நேரில் போட்டியைக் கண்டுகளித்து அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

கடந்த 2003இல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பிஎம்பிடள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு அஜித்குமார் விளையாடியுள்ளார். இந்நிலையில்தான் துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் - கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்மிக்கை ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share