×
 

தோல்வியில் துவளும் இந்திய அணி..! கௌதம் கம்பீர் மீது அதிருப்தி... மும்பையில் கூட்டத்தை கூட்டிய பிசிசிஐ..!

பிசிசிஐ இப்போது தனது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. இதற்காக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளனர்.

கவுதம் கம்பீர் ஜூலை 2024 -ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் கடந்த 6 மாதங்களில் இந்திய அணியின் செயல்திறன் சிறப்பாக எதுவும் இல்லை. இந்திய அணி பல மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. 

முதலாவதாக, இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் இலங்கையிடம் தோற்றது. முதல் முறையாக, நியூசிலாந்திற்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் தொடரை இழந்தது. சமீபத்தில், பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இழந்தது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியிலிருந்தும் வெளியேறியது. எனவே பிசிசிஐ இப்போது தனது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. இதற்காக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளனர்.

பிசிசிஐ இன்று ஜனவரி 11 சனிக்கிழமை மும்பை தலைமையகத்தில் மறுஆய்வுக் கூட்டத்தை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் இடைக்கால செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...

இந்தக் கூட்டத்தில் ​​தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் இந்தியாவின் செயல்திறன் குறித்து கேள்வி கேட்கப்படும்.

கம்பீர் வந்த பிறகு, இந்திய அணி டி20யில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. வங்கதேசத்தை வீழ்த்திய பிறகு, இந்திய அணி உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன் தகுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறும் என்று தோன்றியது. ஆனால் தொடர்ச்சியாக இரண்டு தொடர்களை இழந்ததால் இது நடக்கவில்லை. 

இந்தக் காலகட்டத்தில் இந்திய அணியின் ஜாமபவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலியின் செயல்திறனும் மிகவும் மோசமாக இருந்தது. எனவே அவர்களது டெஸ்ட் ஓய்வு குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சமீபத்திய செயல்பாடுகள் குறித்து மட்டுமே கவுதம் கம்பீரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறது. இது தவிர, இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்கள் குறித்தும் அவரிடம் விவாதிக்க விரும்புகிறது. டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்தும் விவாதம் நடைபெறலாம். ஆனால் கம்பீர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

பிசிசிஐயின் முழு கவனமும் தற்போது பிப்ரவரி 19 முதல் தொடங்கும் ஐசிசி ஒருநாள் போட்டி சாம்பியன்ஸ் டிராபியில் உள்ளது. எனவே கம்பீருக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடிய எந்த சூழ்நிலையையும் உருவாக்க விரும்பவில்லை. இதனால் எந்தவொரு முக்கிய முடிவுகளும் போட்டிக்குப் பிறகுதான் எடுக்கப்படும்.

இதையும் படிங்க: ‘ரோஹித்து... 5 இன்னிங்ஸில் நீ அடிச்ச மொத்த ரன்தான் பும்ரா எடுத்த விக்கெட்டு...’நெறுக்கும் பிசிசிஐ... வெறுக்கும் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share