ஏமாற்றிய கேரம் பந்து... அம்மாவின் நோய்... அஸ்வினை நெகிழச் செய்த மோடியின் கடிதம்
அஸ்வினின் இந்த திடீர் அறிவிப்பால் பிரதமர் நரேந்திர மோடியும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீர் ஓய்வு அறிவிப்பால் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அவரது முடிவால் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். அஸ்வினுக்கு பலருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வினின் இந்த திடீர் அறிவிப்பால் பிரதமர் நரேந்திர மோடியும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அஸ்வினுக்கு எழுதிய சிறப்புக் கடிதத்தில், அஸ்வினின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரது பங்களிப்பைப் பாராட்டினார். அஸ்வின் தொடர்பான சில சிறப்பு தருணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் டிசம்பர் 18 அன்று டிராவில் முடிந்ததும், அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது முடிவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற அடுத்த நாளே, இந்தியா திரும்பிய அவர், சென்னையிலுள்ள தனது இல்லத்தை அடைந்தபோது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவை விட்டு வெளியேறும் விராட் கோலி..! எந்த நாட்டில் செட்டில் ஆகப்போகிறார் தெரியுமா..?
ஓய்வு பெற்று சில நாட்களாகியும், அஸ்வின் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்போது பிரதமர் கூட அஸ்வினுக்கு கடிதம் எழுதி இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில், பிரதமர் மோடி அஸ்வினின் புகழ்பெற்ற கேரம் பந்தைக் குறிப்பிட்டுள்ளார். பேட்ஸ்மேன்கள் அவரது ஆஃப்-பிரேக் பந்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர் கேரம் பந்தில் அவர்களை ஏமாற்றுகிறார். அவரது ஓய்வும் அதே கேரம் பந்தைப் போன்றது’’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியையும் மோடி நினைவு கூர்ந்துள்ளார். அங்கு அஸ்வின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து டீம் இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைக் கொடுத்தார்.
அஸ்வின் விட்டுச்சென்ற வைட் பந்தையும் குறிப்பிட்டு, இது அவரது புத்திசாலித்தனத்தை காட்டுகிறது என்றார். இந்த ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, அஸ்வினின் தாயார் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போட்டியின் நடுவில் திடீரென சென்னை திரும்ப வேண்டியிருந்தது. அஸ்வின், நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்கச் சென்றது மட்டுமின்றி, திரும்பி வந்து மறுநாளே களத்தில் இறங்கிய அர்ப்பணிப்பையும் மறக்க முடியாது என பிரதமர் தனது கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அஸ்வினின் பங்களிப்பை பிரதமர் பாராட்டியுள்ளார். முழு நாடும் அவரது 99 எண் ஜெர்சியை இழக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.