பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டி வரும் இத்தொடரில் குரூப் பி இல் அரையிறுதிக்கு செல்லும் என்ற முக்கியமான போட்டி ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைடுயடுத்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் அட்டல் 85 ரன், அஷமத்துல்லா 67 ரன் விளாசினார். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இயனால் போட்டி நிறுத்தப்பட்டது.

ஆனால், மழை நிற்காமல் தொடர்ந்து கனமழை பெய்ததால், 20 ஓவர்களுக்குக் குறைவாக பந்து வீசப்பட்டிருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானும் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் சுலபமாக அரையிறுதிக்கு செல்லும். ஒரு வேளை தோல்வி அடைந்தாலும், ஆப்கானிஸ்தானைவிட அதிக ரன் ரேட்டில் இருப்பதால், தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது.
இதையும் படிங்க: ஐசிசி கோப்பை இந்தியாவுக்குதான்.. எல்லா ஏற்பாடும் பண்ணிடாங்க.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பகிரங்க புகார்!
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு மழையால் வந்த துரதிர்ஷ்டம்… ஒரே புள்ளியுடன் வெளியேறி அவமானம்..!