ரோஹித் - கம்பீருக்கும் இடையே விரிசல்..? தெளிவுபடுத்திய பிசிசிஐ..!
கடைசி போட்டியில் ரோஹித் தன்னை அணியிலிருந்து விலக்கி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு ரோஹித், கம்பீர் இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தத் தொடரின் போது, இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நடந்த பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையே ஒற்றுமை இல்லை எனக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. முன்னதாக, இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது, அணியை நடத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இப்போது பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்த விவகாரம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரின் போது, கவுதம் கம்பீர் டிரஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்களை லெஃப்ட் ரைட் விடுத்துள்ளார். தொடரின் கடைசி போட்டியில் ரோஹித் தன்னை அணியிலிருந்து விலக்கி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு ரோஹித், கம்பீர் இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் பதவியில் நீடிக்க இன்னொரு சான்ஸ் கேட்கும் ரோஹித்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன.? புதிய தகவல்
மறுபுறம், விராட் கோலி உட்பட அணியின் மற்ற சீனியர் வீரர்களின் மோசமான செயல்திறன் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஊகங்கள் உள்ளன. ஆனால் இந்த தகவல்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார். 'இது முற்றிலும் தவறான கூற்று. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கும், பயிற்சியாளருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இவை அனைத்தும் ஊடகங்களின் ஒரு பிரிவில் பரப்பப்படும் முட்டாள்தனம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான ஃபார்மில் போராடி வந்த ரோஹித்துக்கு ராஜீவ் சுக்லாவும் ஆதரவளித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் 3 போட்டிகளில் அவரால் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தத் தொடரின் போது, மூத்த வீரர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இல்லை என்றால் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்று கம்பீர் இறுதி எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில், 'ரோஹித் கேப்டன் பதவியை விட்டுச் செல்ல வலியுறுத்தியதும் தவறு. அவர்தான் கேப்டன். ஃபார்மில் இருப்பதும், இல்லாமல் போவதும் விளையாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. அவர் ஃபார்மில் இல்லாததால் ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தவிர, அணியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான சமீபத்திய மறுஆய்வுக் கூட்டம் நிறைவடைந்து உள்ளது. நாங்கள் முன்னேறுவதற்கான வழி மற்றும் சிறப்பாகச் செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம்’’ என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்..? தேதியை அறிவித்த ராஜீவ் சுக்லா..!