உலகச் சாம்பியனை துவம்சமாக்கிய பிரக்யானந்தா...!அதிரடி சரவெடி ஆட்டம்
டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டி 2025 ற்கான பட்டத்தை சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் கிரான் மாஸ்டர் பிரகியாநந்தா தட்டி தூக்கி உள்ளார் .
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷை தோற்கடித்து பிரகியானந்தா சாதனை படைத்துள்ளார். சென்னை வேலம்மாள் பள்ளியில் படித்து வந்த பிரக்யானந்தா மற்றும் குகேஷ் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றாலும் போட்டி என்று வந்து விட்டால் ஒரு கை பார்த்து விடுவார்களாம். அதேபோன்றுதான் இருந்தது நேற்றைய டாட்டா ஸ்டீல் சாம்பியன்ஷிப் ஆட்டமும். ஆட்டம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை சரவெடி காய் நகர்தல்களாக இருந்தது.
2025 ஆம் ஆண்டுக்கான டாட்டா ஸ்டீல் உலக சதுரங்க போட்டி நெதர்லாந்து நாட்டின் விச் கான்ஜியில் நடைபெற்றது. 87 ஆவது போட்டியான மாஸ்டர்ஸ் பிரிவில் 14 வீரர்கள் களம் இறங்கினர். இதில் நடப்பு சாம்பியனான வெய் மற்றும் சேலஞ்ச் கோப்பை வெற்றி பெற்ற லியோன் லுக் மென்டோன்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர் மிக இளம் வயது வீரர் 11 வயதான அர்ஜென்டினாவின் வீரர் பாசினோ ஓராவும் கலந்து கொண்டார்.
இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குகேஷ் மற்றும் சென்னை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் பிரக்கியானந்தா ஆகிய இருவரும் டைப்ரைக்கரில் களம் கண்டனர். இதில் பிரக்கியானந்தா தனது அசாத்திய போட்டிகளை வெளிப்படுத்தி குகேஷை எளிதில் போட்டியை கைப்பற்றினார்.
மாஸ்டர்ஸ் பிரிவில் கலந்துகொண்ட குகேஷ் மற்றும் பிரக்கியானந்தா 12 சுற்றுகளின் முடிவில் தல 8 புள்ளி 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தனர். முன்னதாக நடைபெற்ற 13 வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்கியானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசத்துக்காகவே விளையாடுகிறார்கள்... கோலி, ரோஹித் பற்றி சிலாகிக்கும் கவுதம் கம்பீர்..!
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டைப்ரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. டைப் பிரேக்கர் சுற்றில் அசத்தலாக ஆடி பிரத்தியானந்தா வெற்றி கோப்பையை தட்டி பறித்தார். மிக வேகமாக வெறித்தனமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காய் நகர்வுகள் ஜெட் வேகத்தில் இருந்தது என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் பிரக்கியானந்தாவின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாத குகேஷ், நிலைகுலைந்து போனதையும் வீடியோவில் பார்க்க முடிந்தது. எது எப்படியோ நம்ம சென்னை பசங்க உலக அளவில் கொடி கட்டிப் பறந்தால் சரி
இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து: சால்ட் செய்த ‘அசால்ட்’: டி20 தொடரை வென்றது இந்திய அணி