ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்த இரண்டு அணிகளை அடிச்சிக்க முடியாது... ரிக்கி பாண்டிங் சொன்ன இரு அணிகள் இவைதான்.!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடர்களின் இறுதிப் போட்டி என்றால் இந்தியா, ஆஸ்திரேலியாவை தவிர்க்க முடியாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி வாய்ப்பு பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
“இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் தரத்தைப் பாருங்கள். ஐசிசி தொடர்களில் அந்த அணிகளின் செயல்பாட்டை பாருங்கள். இரண்டு அணிகளும் தவிர்க்க முடியாத அணிகள். இந்த இரு அணிகளை வெல்வது கடினம்.
இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில் தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வரும் மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான்தான். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களது செயல்பாடு அபாரமாக உள்ளது. இது மாதிரியான பெரிய தொடர்களில் அவர்களது செயல்பாட்டைக் கணிக்க முடியாது” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன் டிராபியை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா இரண்டு முறை வென்றுள்ளன.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...