இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றது நியாயமில்லையா.? குற்றம் சாட்டியவர்களை கும்மிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியாயமற்ற முறையில் அதிக நன்மையை பெற்றதாக நான் நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை இந்திய அணி வென்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது. ஆனால், இத்தொடரில் இந்திய அணி எல்லாப் போட்டிகளையும் துபாயில் மட்டுமே விளையாடியது. இதனால், இந்திய அணிக்கு அது சாதகமாக இருந்தது என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த விஷயத்தில் ஐசிசி மீதும் இந்திய அணியின் மீதும் முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்திய அணியை விமர்சிப்பதற்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் இப்படித்தான் நடந்திருக்க முடியும். ஏனெனில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது. எனவே, இந்தத் தொடரை நடத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டும்தான் இருந்தது. அதனால், இந்தியா விளையாடிய போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன. இந்தத் தொடரில் நிச்சயமாக இந்தியாவை பாராட்டியாக வேண்டும். இந்தியா அங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியது. இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வளவு நன்றாக விளையாடுவார்கள் என்பது நமக்குத் தெரியும்.
எனவே, இந்திய அணி நியாயமற்ற முறையில் அதிக நன்மையை இத்தொடரில் பெற்றதாக நான் நினைக்கவில்லை. ஓர் அணி நியாயமற்ற முறையில் நன்மை பெற்றதாக கூறினால், அது இந்தியா தனது போட்டிகளை இந்தியாவில் ஆடியிருந்தாலோ அல்லது ஆஸ்திரேலியா தனது போட்டிகளை ஆஸ்திரேலியாவில் ஆடியிருந்தாலோதான் அப்படி சொல்ல முடியும். இந்திய அணி ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் கிடைத்த தாக்கத்தால் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். தங்கள் விளையாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதைத் தெரிந்து, அதிக தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள்.
இதையும் படிங்க: இந்தியாவுக்குள் வராதே... மிரட்டிய ரசிகர்கள்.. 4 ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த வருண்.!
டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும். அதேசமயம் ஒருநாள் போட்டிகளும், உலகக் கோப்பைகளும் முக்கியம். ஒருநாள் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்பது இந்திய அணிக்கு நன்கு தெரியும். இந்தியாவுக்குச் சென்று இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய சவால். இந்திய அணிக்கு சவால் விடுவதை நான் விரும்புகிறேன். இந்திய அணி நிச்சயமாக ஒரு தரமான அணி" என்று கிளென் மெக்ராத் கூறினார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கைக்கு வந்தது எப்படி.? 2027 உலகக் கோப்பையில் விளையாடுவேனா.? மனம் திறந்த ரோஹித்!