×
 

சாம்பியன்ஸ் டிராபி 2025: தூள் தூளாய் நொறுங்கிய நியூசி அணி.. கோப்பையை வென்று இந்தியா சாதனை..!

சாம்பியன்ஸ் டிராபி 2025- இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா அணி. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்திய அணி 9 மாதங்களுக்குள் இரண்டாவது கோப்பையை வென்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் தலைமையில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிறந்த பந்துவீச்சு, கேப்டன் ரோஹித் சர்மாவின் வலுவான இன்னிங்ஸின் உதவியுடன் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்கியது. இதனுடன், இந்த கோப்பையை அதிகபட்ச முறை வென்ற சாதனையையும்  இந்தியா அணி  படைத்துள்ளது.

மீண்டும் ஒருமுறை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா துபாய் சர்வதேச மைதானத்தில் டாஸை வெல்லவில்லை. ஆனால் கடந்த 4 போட்டிகளிலும் டாஸை இழந்த பிறகும் வெற்றியைத்தானே இந்திய அணி ஈட்டியது. அதைப்போன்றே இன்றைய போட்டியிலும் நிகழ்ந்தது. மீண்டும் ஒருமுறை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தனர். வருண் சக்ரவர்த்தி (2/45) முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். குல்தீப் யாதவ் (2/40) என்கிற வகையில் பந்து வீசினார். குல்தீப், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரனை (37) அவுட்டாக்கினார். பின்னர் அடுத்த ஓவரிலேயே அவர் கேன் வில்லியம்சனின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

டேரில் மிட்செல் 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை நிலைநிறுத்தினார். அதே நேரத்தில் க்ளென் பிலிப்ஸும் 34 ரன்கள் எடுத்து பார்ட்னர் ஷிப்பை பலமாக்கினார். ஆனால் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் கேட்சுகளையும் இந்திய அணி  தவற விடாமல் இருந்திருந்தால் நியூசிலாந்து அணி இன்னும் சொற்ப ரன்களிலேயே சுருண்டிருக்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 4 கேட்சுகளை இழந்தது. இருந்த போதும், இந்திய அணியின்  சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது நெருக்கடியான பந்து வீச்சால், நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இறுதியில், மைக்கேல் பிரேஸ்வெல் எடுத்து ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை  251 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணிக்கு வைத்தனர்.

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பெரிய இன்னிங்ஸை  விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அணிக்கு அது தேவையாகவும் இருந்தது. இறுதிப் போட்டி வரை அவரால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரோஹித் (76) தனது ஆக்ரோஷமான பாணியால் நியூசிலாந்து அணியை நிலைகுலைய வைத்தார். ரோஹித்தின் அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் தாண்டி அவுட்டாகினார். அடுத்து சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஷுப்மான் கில்லுக்குப் பிறகு, விராட் கோலி ஒரே ரன் எடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் கேள்விக்குறியாகியது. அடுத்து  ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்க தவறவிட்டார். விரைவில் அக்சர் படேலும்29 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். ஆனால் கே.எல். ராகுல் 34, நாட் அவுட்  ஆகாமலும், ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றனர். வெற்றிக்கு சற்று முன்பு ஹார்திக் அவுட் ஆனார். ஆனால் ராகுல், ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share