×
 

154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய SRH... வெற்றி பெறுமா CSK?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2025 ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். இதில் சேக் ரஷித் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து ஷாம் கரன் களத்திற்கு வந்தார்.

மறுபுறம் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி ஆறு பவுண்டரி அடித்தார். 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதேபோன்று ஷாம்கரன் 1 பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 10 பந்துகளின் 9 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வந்த டெவால்ட் பிரவீஸ், மூன்று சிக்ஸர்களை விளாசினார்.  

இதையும் படிங்க: CSK அணியில் மாற்றங்கள்... டாஸ் வென்ற SRH; பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

11.4 ஓவரில் எல்லாம் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்ததால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது.  13 வது ஓவரில் ஹர்சல் வீசிய பந்தை அடித்த பிரவீஸ் எதிர்பார்த்தார். ஆனால் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கமிண்டு மெண்டிஸ் ஓடி வந்து பாய்ந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார். இதன் மூலம் பிரவீஸ் 25 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதில் நான்கு சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். பின்னர் வந்த சிவம் துபே 9 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். இந்த சூழலில் களத்திற்கு வந்த தோனி ஹர்சல் பட்டேல் பந்தில் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். இறுதியில், தீபக் ஹுடா பொறுமையாக ஆடி 22 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 19.5 ஓவர் முடிவில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை அடுத்து 155 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: ஜடேஜா பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share