×
 

அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வி, மூத்த வீரர்கள் ஃபார்ம் இன்றி தவிப்பது போன்ற காரணங்களால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக அணியில் நிலையாக இடம் பெறாமல் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணிக்குள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். "அணிக்காக பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் விளையாட  நான் தயாராக உள்ளேன். 2023 உலகக் கோப்பைத் தொடரில் நானும், கே.எல்.ராகுலும் மிடில் ஆர்டரில் சிறந்த பங்களிப்பை அளித்தோம். இறுதிப் போட்டியில் மட்டும்  எதிர்பார்த்தது போல செயல்பட முடியாமல் போனது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேசத்துக்காக விளையாடுவது எனக்கு பெருமையான  தருணமாக இருக்கும்” என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

30 வயதான ஸ்ரேயாஷ், 62 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,421 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 47.47. 5 சதங்கள், 18 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். நடப்பு விஜய் ஹசாரே டிராபி தொடரில்  5 இன்னிங்ஸில் இரண்டு சதம் விளாசி உள்ளார். எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர் கேப்டனாக வழிநடத்த உள்ளார். 2023 உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல்  ஸ்ரேயாஸ் ஐயர் குவித்தார். ஜனவரி 19க்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது. இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

 

இதையும் படிங்க: இந்தக் கலாச்சாரம் ஒழியனும்.. இந்திய கிரிக்கெட் உருப்பட மாஜி வீரர் அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share