×
 

IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பாக இல்லை.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அதிருப்தி.!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சி அளித்தாலும், இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்தார்.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ரச்சின் ரவீந்தரா 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார்.



போட்டிக்குப் பிறகு ருதுராஜிடம் மூன்றாவது வீரராக களமிறங்கியது பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ருதுராஜ், "இந்த வெற்றி மகிழ்ச்சி அளித்தாலும், இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கலாம். நான் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்குவதற்கு காரணம் அணியின் நன்மைக்காகதான். என்னுடைய பேட்டிங் ஆர்டர் அணியின் பேலன்ஸைக் கூட்டுகிறது. அணிக்காக இந்த மாற்றம் செய்வது  மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுல் திருப்பாதி அதிரடியாக விளையாடக்கூடியவர். அதனால் அவரை தொடக்க வீரராக களமிறங்குவது நல்ல முடிவாக இருக்கும் என நினைத்தோம்.



முதல் போட்டியில் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஏலத்தின் போதே, நாங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை அதிக அளவு தேர்வு செய்தோம். சுழற் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சேப்பாக்கத்தில் பந்து வீசுகிறார்கள் என்று நினைக்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கலீல் அகமது அனுபவம் வாய்ந்த வீரர். நூர் அகமது, சிஎஸ்கே அணிக்கு ஒரு துருப்புச் சீட்டு. ஜடேஜாவும் அஸ்வினும் அணியில் இருக்கின்றனர். தோனி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் இளமையாகத் தோன்றுகிறார். அவருடைய உடல் தகுதியும் அதிகரித்து இருக்கிறது" என்று ருதுராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ஆர்ஆர் அணி பந்து வீச்சை துவம்சம் செய்த இஷான் கிஷன்: 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share