#IPL2025: மண்ணை கவ்விய டெல்லி அணி..! மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி..!
ஐபிஎல் தொடரின் 29வது ஆட்டத்தில் டெல்லி அணியை தட்டிதூக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மா 18 ரன்கள், ரிக்கில்டன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ரன்களை சேர்க்க தொடங்கினர். சூர்யகுமார் யாதவ் 40 ரன்களிலும், திலக் வர்மா அரைசதம் எடுத்து 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நமன் தீர் 38 ரன்கள் எடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: ஐபிஎல்-2025- ஹர்திக் பாண்டியாவின் சாதனை வீண்: 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி
இதனைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், முதல் பந்திலேயே ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய கருண் நாயர், தனது அசத்தலான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றார். ஆனால் இறுதியாக கருண் நாயர் 80 ரன்களிலும் அபிஷேக் சர்மா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து விப்ராஜ் 14, அக்சர் படேல் 9, அசுதோஷ் சர்மா 17, கே எல் ராகுல் 15, ஸ்டப்ஸ் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆக, மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 2வது வெற்றி ஆகும். 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று தற்போது 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக விரைவாக அதிக ரன்கள்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சாதனை!!