ஐபிஎல்லில் ஓய்வா..? வீல் சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே என்னை விடாது… வாயடைக்க வைத்த தோனி..!
நான் விரும்பும் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியும். அது என்னுடைய சொந்த அணி. இது என்னுடைய உரிமை.
கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய காரணம் எம்.எஸ்.தோனியும் கூட. தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் மட்டுமே விளையாகிறார்.
இது அவரது 18வது ஐபிஎல் சீசன். தோனி இன்று அதாவது மார்ச் 23 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும். இந்த சீசனைத் தொடங்குவதற்கு முன்பு, தோனி தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பந்துகளை தெறிக்கவிட்ட பில் சால்ட்... கதறிய கே.கே.ஆர் அணி!!
கடந்த 2-3 ஆண்டுகளாக, ஒவ்வொரு சீசனிலும், ஐபிஎல்லில் தோனி கடைசியாக விளையாடும் போட்டி இதுதான் எனக் கூறப்பட்டு வருகிறது. கடந்த சீசனிலும் இதையேதான் பலரும் கூறினார்கள். ஆனால் சீசன் முடிவதற்குள் அவர் அதனை மறுத்தார். தற்போது அவருக்கு 43 வயது. இந்த சீசனின் சீனியர் வீரரும் இவரே.
இந்நிலையில், இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் விரும்பும் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியும். அது என்னுடைய சொந்த அணி. இது என்னுடைய உரிமை. நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், சிஎஸ்கே என்னை இழுத்துச் செல்லும்'' எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தோனி குறித்து பேசும்போது, ''தோனி இன்னும் பல ஆண்டுகள் லீக்கில் விளையாட வேண்டும்.நீங்கள் பார்த்தால், சச்சின் டெண்டுல்கர் 50 வயதிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, தோனிக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்' என்று கெய்க்வாட் கூறினார்.
சச்சின் சமீபத்தில் சர்வதேச மாஸ்டர் லீக்கில் விளையாடினார். அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!