×
 

பில் சால்ட்-ஐ கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிய தோனி... ஷாக்கான ஆர்.சி.பி ரசிகர்கள்!!

ஆர்சிபி அணியின் பில் சால்ட்-ஐ தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார்.

ஆர்சிபி அணியின் பில் சால்ட் முதல் சில பந்துகள் பில் சால்ட் தடுமாறினாலும், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதன்பின் அஸ்வின் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசப்பட்டது. அடுத்தடுத்து பில் சால்ட் அதிரடியாக ரன்களை குவித்ததால், 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 37 ரன்களை விளாசியது.  5 ஆவது ஓவரை வீசுவதற்காக நூர் அஹ்மத் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்த பின், 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

இதையும் படிங்க: இவங்கள அவுட் ஆக்கிட்டா இன்று வெற்றி நிச்சயம்... சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் சொல்வது யாரை?

இந்த நிலையில் கடைசி பந்தை எதிர்கொள்ள பில் சால்ட் வந்தார். அப்போது, நூர் அஹ்மத் வீசிய பந்தில் பவுண்டரி விளாச நினைத்த பில் சால்ட், ஒரு சென்டிமீட்டர்கள் வெளியில் கால்களை கொண்டு வந்த போது, தோனி மின்னல் வேகத்தில் பந்து பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதை அடுத்து அவர் அவுட்டா இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

இதை அடுத்து 3வது நடுவர் பார்த்தபோது பில் சால்ட் கால்கள் ஸ்டம்பில் செய்த போது, காற்றில் இருந்தது தெரிய வந்தது. இதனால் பில் சால்ட் 16 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சிஎஸ்கே வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முதல் விக்கெட் கிடைத்தது. இதேபோல் கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவை தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share