ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிப்பு: ஆப்கானிஸ்தான் வீரர் ஜத்ரான் அபாரம்..!
தற்போது, ஜத்ரானுக்கு 23 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே, அவர் ஒரு பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இப்ராஹிம் சத்ரான் சதம் அடித்து அற்புதமான சாதனை படைத்தார். இவர் 177 ரன்கள் எடுத்து புயல் போல் விளையாடி இந்த இன்னிங்ஸின் அடிப்படையில் அவர் பல உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
சமீபத்தில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக தனிநபர் ஸ்கோர் எடுத்த சாதனையை படைத்திருந்தார். இப்போது அதை சத்ரான் முறியடித்துள்ளார். ரோஹித் சர்மாவின் உலக சாதனையையும் இப்ராஹிம் சத்ரான் முறியடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மாவின் 223 நிமிடங்கள் பேட்டிங் சாதனையை அவர் முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக இப்ராஹிம் 226 நிமிடங்கள் பேட்டிங் செய்து உலக சாதனை படைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடிய பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்காக மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடிய பேட்ஸ்மேன் என்பதையும் இப்ராஹிம் சத்ரான் நிரூபித்துள்ளார். ஜத்ரான் 146 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 177 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: ரோஹித் எடுத்த இதயத்தை உடைக்கும் முடிவு... விராட் கோலிக்காக கழற்றிவிடப்பட்ட வீரர்..!
இந்த சாதனை இன்னிங்ஸின் மூலம், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் ஐசிசி போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது, ஜத்ரானுக்கு 23 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே, அவர் ஒரு பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு முன்பு, இப்ராஹிம் சத்ரான் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் சதம் அடித்துள்ளார். இப்போது இந்த எல்லா நாடுகளுடனும் சதம் அடித்ததில் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா பட்டியலில் இணைந்துள்ளார். சச்சின், சனத் தவிர, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மார்லன் சாமுவேல்ஸ், திலகரத்ன தில்ஷன், யூனிஸ் கான் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரும் இந்த நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்துள்ளனர்.
35 ஒருநாள் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ஷுப்மான் கில்லின் பட்டியலில் இப்ராஹிம் சத்ரான் இப்போது இணைந்துள்ளார். கில், பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் ஆகியோர் 35 ஒருநாள் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தலா 6 சதங்களை அடித்திருந்தனர். ஜத்ரானும் அதே எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 6 சதங்களை அடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த ஒரே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜத்ரான். இது ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அவரது இரண்டாவது சதம். முன்னதாக, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் அதிர்ச்சி.. ரோஹித் சர்மா விலகல்..?