×
 

பேயாட்டம் ஆடிய தென்னாப்பிரிக்கா... மிரண்டு போன இங்கிலாந்து!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லீக் ஆட்டத்தில் பின் தங்கிய பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. குரூப் ஏ அணியில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்த நிலையில் ஐசிசி சாம்ன்பியன்ஸ் தொடரின் 11வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதிகின்றன. லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாத இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லுமா..? தென் ஆப்ரிக்கா முன் இருக்கும் வாய்ப்பு என்ன..?

இந்த சூழலில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் கோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி போட்டி தொடங்கியதும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சால்ப்ட் 8 ரன்களிலும், டக்கெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித் ரன் எடுக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

இவர்களை தொடர்ந்து இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ரூட் 37 ரன்களிலும், புரூக் 19 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கியுள்ள கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேமி ஆட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2விக்கெட்டுகளையும் வீழ்ச்சி அசத்தியுள்ளனர்.

இந்த போட்டியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிக்கும் தென்னாப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை எட்டுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஐசிசி சான்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரையிறுதிக்கு முன்னேறப் போகும் அணி எது..? இங்கிலாந்துடன் ஆப்கானிஸ்தான் பலப்பரிட்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share