ஈ சாலா கப் நம்தே... இந்த வருஷம் கப் ஆர்.சி.பி-க்கா? பிசிசிஐ செயலை வைத்து ரசிகர்கள் ஆரூடம்!!
2025 ஐபிஎல் தொடரின் எந்த அணி வெல்லப்போகிறது என்பது குறித்த ரசிகர்களின் ஆரூடம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதரும், கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக ரஹானேவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன.
முதலில் பெங்காலைச் சேர்ந்த பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா படானியின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் இருவரையும் ஷாரூக் கான் வரவேற்றார். அப்போது விராட் கோலிக்கு, ஐபிஎல் 18 என்ற ஞாபக பரிசு ஒன்று பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது. 2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்தத் தொடர் 18 வது ஆண்டை எட்டி இருக்கிறது.
இதையும் படிங்க: ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி... ஷாருக் - கோலி டான்ஸ்... களைகட்டிய ஐபிஎல்!!
அதை குறிப்பிடும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டாலும் ரசிகர்கள் இதை வேறு கோண்த்தில் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி, 10 அணிகளும், பல்வேறு நட்சத்திர வீரர்களும் இருக்கும் நிலையில் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விராட் கோலியின் ஜெர்சி எண் 18, அவரது எண்ணை குறிக்கும் ஐபிஎல் 18 என்ற ஞாபகச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டது என கூறப்பட்டது.
மற்றொரு ரசிகர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் 18 ஆண்டுகளாக இதுவரை கோப்பை வெல்லவில்லை. எனவே, அந்த அணிதான் இந்த முறை கோப்பை வெல்ல உள்ளது. அதாவது விராட் கோலியின் எண்ணான 18 என்பதை குறிக்கும் 18 வது ஆண்டில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உள்ளது. அதைத்தான் ஞாபக சின்னத்தை வழங்கி சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்பதை ரசிகர்கள் கணித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: IPL 2025: இந்த வருஷமும் ஈசாலா கப் நம்தே கிடையாது.. பங்கம் செய்த ஆஸ்திரேலிய லெஜெண்ட்..!!