தேசத்துக்காகவே விளையாடுகிறார்கள்... கோலி, ரோஹித் பற்றி சிலாகிக்கும் கவுதம் கம்பீர்..!
சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவின் பங்களிப்பு முக்கியமானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்.19இல் தொடங்குகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுக்கான எதிரான போட்டி பிப். 23இல் நடைபெறுகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
“ரோஹித்தும், விராட் கோலியும் இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரர்கள். அவர்கள் இருவரும் அணியில் இருப்பது இந்திய அணிக்கு வலுச் சேர்க்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் இருவருடைய பங்களிப்பும் முக்கியமானது. ஏற்கெனவே சொன்னது போல தேசத்துக்காக விளையாட வேண்டும் என்கிற வேட்கை அவர்களிடம் உள்ளது. அதை சிறப்பாக செய்யவே இருவரும் விரும்புகிறார்கள்.
உலகக் கோப்பை தொடருடன் ஒப்பிடும்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் முற்றிலும் வித்தியாசமான தொடர்தான். இதில் ஒவ்வோர் ஆட்டமும் முக்கியமானது. அதனால் இந்தத் தொடரை எப்படித் தொடங்குகிறோம் என்பது முக்கியம். இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்றால் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானின் நிபந்தனைக்கு பணிந்த இந்திய அணி..!
பிப். 23ஆம் தேதி அன்று பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியை மட்டுமே வெல்ல வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி துபாய் பயணிக்கவில்லை. எல்லா ஆட்டங்களிலும் வென்று, சாம்பியன் பட்டத்தை வெல்லவே துபாய் பயணிக்கிறோம்” எனப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் பெரும் பரபரப்பு..! இந்திய அணியின் ஜெர்சி சர்ச்சை: இக்கட்டான நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா..!