இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கள்ளச் சந்தையில் விறுவிறு... ஒரு டிக்கெட் விலை இத்தனை லட்சங்களா..?
இறுதி நேரத்தில் டிக்கெட்டின் விலை ரூ.1.86 கோடியாக உயர்ந்ததாகவும் அப்போது கூறப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் மிகப்பெரிய போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடைபெறும் இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஒரு நொடியில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண பலரும் விரும்புவதால், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்களில் பெரும்பாலோர் அதன் விலையை வானளாவ உயர்த்தியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.4 முதல் 5 லட்சத்திற்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகின்றன. ஒரு இணையதளத்தில், துபாயின் கிராண்ட் லவுஞ்சிற்கான டிக்கெட்டின் விலை ரூ.4 லட்சத்து 29 ஆயிரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதே மைதானத்தில் உள்ள கிராண்ட் லவுஞ்சில் முன் வரிசை இருக்கையின் விலை சுமார் ரூ.5 லட்சத்தை எட்டுகிறது. துபாய் மைதானத்தின் கிராண்ட் லவுஞ்சிலிருந்து போட்டியின்போது வீரர்களை அருகில் இருந்து காண முடியும்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகளின் விலையில் கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது புதிதல்ல. 2024 டி20 உலகக் கோப்பையின் போது, இந்தப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை கள்ளச் சந்தையில் 16 லட்சத்தை எட்டியது. இறுதி நேரத்தில் டிக்கெட்டின் விலை ரூ.1.86 கோடியாக உயர்ந்ததாகவும் அப்போது கூறப்பட்டது. அத்துடன் ஒப்பிடுகையில், துபாயில் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலைகள் மீண்டும் மிகக் குறைவே.
இதையும் படிங்க: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா? ஐசிசி போட்டோஷீட் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவதும் தயாராக உள்ளது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இரு நாடுகளும் கடைசியாக மோதியது 2017 ஆம் ஆண்டு. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான்- இந்தியா இடையேயான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாகவே இருக்கும்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...