×
 

ஐபிஎல் 2025: புள்ளி பட்டியலில் சரிந்த பஞ்சாப் கிங்ஸ்... ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி..!

அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடியில் மிரட்டினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஐபிஎல் 2025 தொடரின் 18வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் நடைபெற்றது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் உள்ளூர் போட்டியில் களமிறங்கியது. 

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெயஸ்வால் 67, ரியான் பராக் 43 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி பவுலர்களில் பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜான்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்த சீசனில் பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்காமல் இருந்து வந்த யஷஸ்வி ஜெய்வால் பார்மை மீட்டெடுத்தார். அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்ஸர்கள் என அதிரடியில் மிரட்டினார்.

ஜெயஸ்வால் - சஞ்சு சாம்சன் இணைந்து நல்ல தொடக்கத்தை தந்தனர். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் - சாம்சன் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர். 38 ரன்கள் அடித்த சாம்சன் முதல் விக்கெட்டாக அவுட்டானார். ஜெயஸ்வால் 40 பந்துகளில் இந்த சீசனில் முதல் அரைசதமடித்தார். 45 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களை அடித்தார்.

இதையும் படிங்க: சிஎஸ்கே அணியா இது.? ஹாட்ரிக் தோல்வி.. சேசிங்கில் சொதப்பல்.. தவிடுபொடியாகும் பழைய சாதனைகள்!

கடந்த போட்டியில் அதிரடியில் மிரட்டிய் ராணா இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய ராணா 12 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய பராக் 25 பந்துகளில் 43 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவர் தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்தார். ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் அடித்தது. அதன் பிறகு கடைசி 10 ஓவரில் கூடுதலாக 120 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்களை குவித்தது.,பஞ்சாப் பவுலர்களில் 4 ஓவர்கள் வீசிய ஸ்டோய்னிஸ் 48 ரன்களை வாரி வழங்கினார். 

இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் பந்திலேயே பஞ்சாப் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. பிரியான்ஷ் ஆர்யா டக் அவுட் ஆகி வெளியேறினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரை கிளீன் பவுல்டு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஓவரிலேயே இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐயரையும் ஆர்ச்சர் கிளீன் பவுல்டு செய்தார்.

அந்த அணி வெறும் 26 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். பிரப்சிம்ரன் சிங் 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.கிளென் மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பஞ்சாப் அணி 131 ரன்களில் மற்றொரு விக்கெட்டை இழந்தது. நேஹல் வதேரா 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூர்யான்ஷ் ஷேட்ஜ் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்பினார்.  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராயல் ராஜஸ்தான் தரப்பில் அர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா, மகேஸ் தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மீண்டும் சிஎஸ்கே அணி கேப்டனாகும் தோனி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share