×
 

IPL 2025: 65 நாட்கள் 74 போட்டிகள்.. ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெகா விருந்து.!!

பதினெட்டாவது ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. பிளே ஆஃப் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.

2008 முதல் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு பதினெட்டாவது சீசன் ஆகும். இந்த சீசன் மார்ச் 22 தொடங்கி மே 25 வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 திரு​விழா​வின் தொடக்க விழாவும் முதல் போட்டியும் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொங்க உள்ளது.

இத்தொடரில் தலா 5 முறை சாம்​பியன்​களான சென்னை சூப்​பர் கிங்​ஸ், மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், 2008இல் பட்​டம் வென்ற ராஜஸ்​தான் ராயல்​ஸ், 2016இல் வென்ற சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத், 2022இல் கோப்பையை வென்ற குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய அணி​களு​டன் 17 சீசன்​களாக பட்​டமே வெல்லாத ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, பஞ்​சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி​களும் மற்​றும் 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் அறி​முக​மாகி 2 முறை பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யும் பட்​டம் வெல்​வதற்​காக மல்​லுக்​கட்ட உள்​ளன.

இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா… அனிரூத் இசையுடன் தொடங்கும் ஐபிஎல்!!



தொடக்க ஆட்​டத்​தில் இன்று இரவு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யுடன் மோதுகிறது. இரு அணி​களுக்குமே புதிய கேப்​டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் கொல்​கத்தா அணி​யின் கேப்​ட​னாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் இம்​முறை பஞ்​சாப் அணிக்கு சென்​றுள்​ளார். இதனால் கொல்​கத்தா அணி அஜிங்க்ய ரஹானே தலை​மை​யில் விளை​யாட உள்​ளது. பெங்​களூரு அணி இது​வரை சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் அறி​முக​மா​காத ரஜத் பட்​டி​தார் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.  மூத்த வீரர் விராட் கோலி வழிகாட்டுதலுடன் ஆர்சிபி விளையாட உள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் டீமோடு ரிக்கி பாண்டிங் செய்த செயல்... கடுப்பான பாக். ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share