ஐபிஎல் டி20 தொடரில் புகையிலை, மது விளம்பரங்கள் கூடாது... மத்திய அரசு உத்தரவு..!
2025 ஐபிஎல் டி20 சீசனில் போட்டியை ஒளிபரப்பும் தேசிய சேனல்கள் மது, புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களை முன்னூதாரனமா ஏராளமான இளைஞர்கள் எடுத்து விளையாடி வருவதால், அவர்கள் நடித்த மது, புகையிலை விளம்பரத்தை வெளியிட்டால் இளைஞர்களின் ஒழுக்கம், தவறான நடத்தைக்கு காரணமாகிவிடும் என்பதால் ஒளிபரக்கூடாது என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கும் மத்திய சுகாதாரத்துறை சேவை இயக்குநர் அதுல் கோயல் கடிதம் எழுதி, “ சமூக மற்றும் ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு பொது சுகாதாரத்தை ஊக்கப்படுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை செயலர் அதுல் கோயல் , ஐபிஎல் மற்றும் பிசிசிஐ அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ புகையில், மது விளம்ரங்கள் போட்டி நடக்கும்போது தேசிய சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது. இளைஞர்கள், வளரும் குழந்தைகளுக்கு ரோல்மாடல்களாக கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடல்நலன் ஆகியவற்றை ஐபிஎல் கற்றுத்தர வேண்டும். நாட்டின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஐபிஎல், சமூக, ஒழுங்கத்துக்கு கட்டுப்பட்டு, பொதுசுகாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டும், அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயார்... கே.கே.ஆர். அணி நிர்வாகத்துக்கு மெசேஜ் சொன்ன வெங்கடேஷ் அய்யர்.!
புகையிலை, மது தொடர்பாக அனைத்து விளம்பரங்கள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஒளிபரக்கூடாது. மைதானத்திலோ அல்லது ஐபிஎல் தொடர்பான நிகழ்ச்சிகளிலோ இத்தகைய விளம்பரங்கள் இருக்கக்கூடாது, போட்டியை ஒளிபரப்பும்போதும் தேசிய சேனல்களிலும் ஒளிபரப்பக்கூடாது. ஐபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மைதானங்கள், அரங்குகளில் புகையிலை, மது விற்பனை செய்யக்கூடாது. விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் புகையிலை, மது தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கக்கூடாது.
தொற்றுநோய் அல்லாத நோய்களால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதயநோய், புற்றுநோய், நுரையீல் நோய், நீரிழிவுநோய், ரத்தக்கொதிப்பு ஆகியவற்றால் ஆண்டுக்கு 70 சதவீத உயிரிழப்புகள் நடக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் புகையிலை, மது அருந்துதல் மூலமாக இருக்கிறது.
உலகளவில் புகையிலை தொடர்பாக மரணங்களில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது, ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கிறார்கள், இந்தியர்கள் மனரீதியாக பாதிக்கப்பட மது முக்கியக் காரணம்.
இந்தியாவில் அதிகமாக பார்க்கப்படும் விளையாட்டாக ஐபிஎல் இருக்கிறது. இந்தத் தொடரில் புகையிலை, மதுவை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் ஒளிபரப்பினால் மக்களுக்கு எதிர்மறையான செய்திகளை தெரிவிக்கும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: தோனி வீட்டிற்கு வந்த 5 'ஆயுதங்கள்'- முதன்முறையாக 'தல'-யின் துணிச்சல்..!