PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!
பஞ்சாப் அணி நிர்ணயிக்கும் இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை தங்களிடம் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ், நான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். கடந்த இரண்டு போட்டிகளில் இங்கு விளையாடி இருக்கின்றோம். இதனால் ஆடுகளம் எங்களுக்கு பழகியிருக்கிறது.
பனிப்பொழிவு இருக்கு செய்கிறது. ஆனால் அது ஆடுகளத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்று நான் அணியில் என்ன மாற்றம் செய்திருக்கிறேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை உங்களிடம் பின்னர் தெரிவிக்கின்றேன். நாங்கள் பில்டிங்கில் கேட்ச்களை அதிக அளவில் பிடிக்க வேண்டும். சிறந்த கேட்சுகளை பிடித்தால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் பயிற்சியை கைவிடவே இல்லை... சிஎஸ்கே இளம் வீரருக்கு பவுலிங் ஆலோசகர் புகழாரம்!!
அவரை தொடர்ந்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே, நாங்கள் முதலில் இந்த ஆடுகளத்தில் பந்து வீச தான் தேர்வு செய்ய இருந்தோம். தற்போது நினைத்த முடிவே கடைத்திருக்கிறது. எனினும் டாசை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. பஞ்சாப் அணி எந்த இலக்கை நிர்ணயிக்கிறதோ அதனை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை எங்களிடம் இருக்கின்றது. எங்கள் அணியில் இன்று மோயின் அலிக்கு பதிலாக ஆண்டிரிச் நோக்கியா களமிறங்குகிறார்.
தன்னுடைய உடல் தகுதியை மீட்க அவர் கடுமையாக போராடி வந்தார். அவர் எப்படி பந்து வீசப் போகிறார் என பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். ஆண்டிரிச் நோக்கியா மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் களத்திற்கு திரும்பிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்.. பட்டியலிட்ட காரணங்கள்!!