பாகிஸ்தான் கிரிக்கெட் நாசமாகிவிடும்... பிசிபிக்கு ஏற்பட்ட அவமானம்- 'பிராண்ட் மதிப்பு' பாதிப்பு..!
போட்டியில் மக்கள் ஆர்வத்தை இழப்பது, பாதி நிரம்பிய மைதானங்களை ஒளிபரப்பாளர்கள் காண்பிப்பது போன்ற பிற பிரச்சினைகள் உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்டது பாகிஸ்தான் அணிதான். 29 வருடங்களுக்குப் பிறகு, ஒரு ஐ.சி.சி போட்டியை நடத்த எப்படியோ பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இப்போது பாகிஸ்தானின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதாவது பிசிபிக்கு அதன் தேசிய அணிக்கு ஸ்பான்சர்கள் பிரச்னை கடும் சவாலாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த முறை, சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, அந்த அணிக்கு ஸ்பான்சர்களைப் பெறுவது ஒரு சவாலாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, போட்டியை நடத்தும் அணியை போட்டியிலிருந்து வெளியேற்றியது. இந்தியாவிடம் தோல்வியடைவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டிக்காக கடாபி மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் முழு நம்பிக்கையுடன் இருந்தனர்.
"பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை ரசித்த மக்களின் வரவேற்பைப் பார்ப்பது ஒரு ஊக்கமளிக்கும் அனுபவமாக இருந்தது. ஆனால் இப்போது சவால் என்னவென்றால், 29 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய போட்டியை நாங்கள் நடத்துவதால், மீதமுள்ள போட்டிகளுக்கு பாகிஸ்தானில் கூட்டம் தொடர்ந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்'' என்று வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி, 1996 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டியாகும். ஆகையால் இந்தத் தொடரில் அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திங்கட்கிழமை நியூசிலாந்து வென்றதன் மூலம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும்... நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் காலி..!
பாகிஸ்தான் அரையிறுதியில் விளையாடாவிட்டாலும், பிசிபிக்கு பெரிய நிதி பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் கேட் ஸ்லிப்கள் மற்றும் மைதான வருவாய்க்கான பிற ஆதாரங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்று வாரியத்தின் வணிகப் பிரிவின் நம்பகமான வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரச்சனையில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் 'பிராண்ட் மதிப்பு' பாதிக்கப்படப் போகிறது.
''ஐ.சி.சி வருவாயில் போட்டிகளை நடத்துவதற்கான கட்டணம், டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றில் எங்களுக்குப் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெரிய இங்கு கிரிக்கெட் மீதான மோகம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு பிராண்டாக விற்பனை செய்வது எளிதல்ல என்பது மிகப்பெரிய கவலை'' என கவலை தெரிவிக்கின்றனர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தானில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாதிகள் வைத்த குறி..!