குஜராத் டைட்டன்ஸ்-ஐ சுறுட்டிய பவுலர்கள்.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!!
குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் சீசனில் அகமதாபாத்தில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், குஜராத் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரரான பிராப்சிம்ரன் சிங் ஐந்து ரன்களிலும் அஸ்மதுல்லா உமர் சாய் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களம் இறங்கிய பிராயான்ஸ் ஆர்யா அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.
அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் கோல்டன் டக் ஆனார். இதை அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 15 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடி 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ஸ்ரேயாஸ் பந்துகளை அடித்து விளாசினார். 19வது ஒவர் முடிவில் ஸ்ரேயாஸ் 42 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஷாசாங், அதிரடியாக விளையாடி, 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் விதியை ஏன் மாத்தனும்? டுபிளசிஸ் சொல்லறத கேளுங்க!!
இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 244 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் ஆடினாலும் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இலக்கை எட்ட தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய ஜோஷ்பட்லர் மற்றும் ரூதர்போர்ட் அபராமாக ஆடி ரன்களை குவித்தனர். 17வது ஓவரில் ஜோஷ்பட்லர் 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் தெவாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு குஜராத் அணி வெறும் 232 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IPL 2025: வயிற்றுக்குள் போன வெற்றியை கையை விட்டு எடுத்த வீரர்.. யார் இந்த விப்ராஜ் நிகம்.?