இந்திய அணியில் கடும் போட்டி... சாம்பியன்ஸ் டிராபியில் யார் யாருக்கு வாய்ப்பு?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நபர்கள் அறிவிக்கப்பட்ட பிறகே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணி வீரர்கள் பட்டியல் தெளிவாக அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே எஞ்ஜியுள்ளன. ஆனால் இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நபர்கள் அறிவிக்கப்பட்ட பிறகே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணி வீரர்கள் பட்டியல் தெளிவாக அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்தத் தொடரில், இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட வேண்டும். அங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அந்தப் போட்டிகளில், இந்திய அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமேஇடம்பெறுவர். இதற்கு ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் இடையே கடுமையான போட்டி உள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் அந்த இருவரில் யாருக்கு வாய்ப்பு தருவார்கள் என்பதுதான் இப்போது கேள்வி.
துபாய் ஆடுகளம் ஆட்டத்தின் வேகம் குறைவடைந்து ரன்களை எடுப்பது மிகவும் கடினம். எனவே இங்கு சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு அதிகரிக்கிறது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்கு உரியவர் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி. அப்படிப் பார்த்தால் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களை தனது அணியில் சேர்க்கலாம்.
இதையும் படிங்க: Champions Trophy 2025: இரண்டு குழுக்கள்.. 8 அணிகள்... உலகமே உற்று நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது..?
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஒரு நாள், டி20 உலகக் கோப்பையைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் அணியில் இடம்பிடிப்பார்கள்.
ஆனால் விளையாடும் 11 பேரில் இரண்டு சுழற்பந்து வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இதில் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் இடம்பெறலாம். இரு வீரர்களும் சிறப்பான பந்துவீச்சுடன் பேட்டிங்கிலும் கைதேர்ந்தவர்கள். அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான ஜடேஜா, பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்திருகிறார். அக்சர் படேல் சமீப காலமாக தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்யலாம். தேவைப்பட்டால் மிடில் ஆர்டருக்கும் பயன்படுத்தப்படுவார்.
2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவர் இதனை நிரூபித்துள்ளார். குல்தீப் காயத்துடன் போராடி வருகிறார். அவரை அணியில் சேர்ப்பது கடினம். நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் குல்தீப் யாதவ் காயம் அடைந்தார். இதற்குப் பிறகு, அவர் சமீபத்தில் ஜெர்மனியில் இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்ப்பது கடினம் என்று தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மீண்டும் களமிறங்க முடியாவிட்டால், அவருக்கு இடம் கிடைக்காமல் போகலாம். எனவே, தற்போது ஜடேஜாவும், அக்சர் படேலும் விளையாடும் லெவனில் விளையாடுவது உறுதியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ‘போதும் போதும்... உங்க விளையாட்டு...’ இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய கவுதம் கம்பீர்..!