ஐபிஎல் 2025: ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு: விராட் கோலிக்கு வாய்ப்பு மறுப்பு
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேப்டனாக ஆசைப்படுவதாக சூசகமாகத் தெரிவித்திருந்த விராட் கோலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞச்ர்ஸ் பெங்களூரு அணி 2008ம் ஆண்டலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் என்பது கனவாகவே இருந்து வருகிறது. அந்த அணியில் “கோட்” பேட்டர் கிங் கோலி இருந்தும், அந்த அணியால் இறுதிப்போட்டிவரைதான் செல்ல முடிந்தது சாம்பியன் பட்டத்தை சூடமுடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அந்த அணிக்கு தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் கேப்டனாக கடந்த 2 சீசன்களுக்கும் செயல்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் முடிந்தநிலையில் கேப்டன்ஷிப்பில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின, அவரும் ஆசைப்பட்டார் என்றும் தவல்கள் தெரிவித்தன. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் நடுவரிசை பேட்டர் ரஜத் பட்டிதார் கேப்டனாக நியமித்து ஆர்சிபி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அற்புதம்..! நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்து சாதனை: முதல் இந்தியராக சுபமன் கில் அசத்தல்..!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் பட்டிதார், சயத் முஸ்தாக் அலி கோப்பையில் மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக இருந்தார். ஆர்சிபி அணிக்கு 8-வது கேப்டனாகரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக ரஜத் பட்டிதார் வாங்கப்பட்டார். வேகப்பந்து, சுழற்பந்துவீச்சை அதிரடியாக ஆடக்கூடிய பட்டிதார் 27 போட்டிகளில் 799 ரன்கள் சேர்த்து 158 ஸட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
ஆர்பிசி அணி ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்களை தக்கவைத்ததில் விராட் கோலி, யாஷ் தயால் தவிர, பட்டிதாரும் அடங்கும். பட்டிதாருக்கு ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி நிர்வாகம். நடுவரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய பட்டிதாரிடம் இருக்கும் மிகப்பெரிய குறை, நிலைத்தன்மை இல்லாமல் பேட் செய்வதாகும். அருமையான அதிரடி பேட்டரான பட்டிதார் நிலைத்தன்மையுடன் பேட் செய்தால் பல போட்டிகளில் இவர் ஒருவரே ஆட்டத்தை முடித்துவிடக்கூடிய திறமை கொண்டவர்.
ஆனால் அவசரப்பட்டு பெரிய ஷாட்களுக்கு முற்பட்டு விக்கெட்டை இழந்துள்ளார். 2022 சீசனில் பட்டிதாரை ரீலீஸ் செய்த ஆர்சிபி நிர்வாகம், அந்த ஆண்டு ஏலத்தில் பட்டிதாரை எந்த அணியும் வாங்கவில்லை. அந்த சீசனில் லுவித் சிசோடியாவுக்கு காயம் ஏற்படவே, மீண்டும் ஆர்சிபி அணி அவரை வாங்கியது. அப்போது 8 இன்னிங்ஸில் 333 ரன்கள் ஒரு சதம் அடித்து மீண்டும் ஆர்சிபி அணிக்குள் நிரந்தர வீரராக மாறினார்.
2011ம் ஆண்டு ஆர்சிபி கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி, 2012 முதல் 2021 வரை அந்த அணியை வழிநடத்தினார். கோலியின் கேப்டன்ஷியில் ஆர்சிபி அணி 2015 சீசனில் 2வது இடத்தைப் பிடித்தது, அந்த சீசனில் கோலி 973 ரன்களை விளாசினார். 2020, 2021 சீசனில் ப்ளை ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி சென்றது. 2022, 2024 வரை ப்ளே ஆஃப் சுற்றிலும் ஆர்சிபிவிளையாடியது. டூப்பிளசிஸ் கேப்டனாக இரு சீசன்களுக்கு அணியை வழிநடத்தினார், அவருக்கு உடல்நலக் குறைவுஏ ற்பட்டபோது, விராட் கோலி அணியை வழிநடத்தினார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி.. பும்ரா, ஜெய்ஸ்வால் அவுட்.. துபாய் செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!