×
 

42 பவுண்டரிகள் 15 சிக்சர்கள் அடித்து விளாசல்... பந்துகளை பதம்பார்த்த சாய் சுதர்சன்!!

2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் ஐந்து அரை சதம் அடித்து விளாசியுள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி குஜராத் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி களமிறங்கி விளையாடியது. அந்த அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐந்தாவது முறையாக அரை சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் ஐந்து அரை சதம் அடித்து சாய் சுதர்சன் மீண்டும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.

தற்போது சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 52 என்ற அளவில் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 152 என்று அளவில் இருக்கிறது. சாய் சுதர்சன் நடப்பு தொடரில் மட்டும் ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார். மொத்தமாக 42 பவுண்டரிகளும், 15 சிக்சர்களையும் சாய் சுதர்ஷன் விளாசி இருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது. லக்னோ அணியின் இடம்பிடித்து இருந்த நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார்.

இதையும் படிங்க: தொடர் தோல்விகளை சந்தித்த CSK.. பயிற்சியாளர் பிளமிங்கை வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா!!

தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானை தாண்டி சென்று விட்டார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது. இந்த நிலையில் சாய் சுதர்சன் இந்திய ஒரு நாள் அணியில் வெறும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார். டி20 போட்டியில் ஒரு ஆட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்.

ஆனால் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. சாய் சுதர்சன் கடைசியாக இந்திய அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டும், டி20 கிரிக்கெட்டில் 2024 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார். இடையில் சாய் சுந்தரசனுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். இதனால் சாய் சுதர்சனை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிஎஸ்கேவை இப்படி பார்த்ததே இல்லை.. பயிற்சியாளர், அணி நிர்வாகத்தை பொளந்த சுரேஷ் ரெய்னா.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share