70% வீரர்கள் CSK-வில் இருந்து நீக்கப்படுவார்கள்.. ரகசியத்தை போட்டுடைத்த ரெய்னா!!
சிஎஸ்கே அணியில் 70 சதவீத வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, மதீஷா பதிரானா, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர். ரவிச்சந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவோன் கான்வே போன்ற முன்னாள் சிஎஸ்கே வீரர்களை அந்த அணி வாங்கியிருந்தது. அவர்களை தவிர்த்து பல புதிய வீரர்களையும் சிஎஸ்கே அணி வாங்கியது.
இதையும் படிங்க: இந்த டீம் தான் 2025 ஐபிஎல் கோப்பை வெல்லும்... யுவராஜ் சிங் ஆருடம்; ரசிகர்கள் ஷாக்!!
ஆனால் தக்க வைக்கப்பட்ட வீரர்களும், முன்னாள் சிஎஸ்கே வீரர்களும், புதிதாக வாங்கப்பட்ட வீரர்களும் என அனைத்து தரப்பிலும் யாரும் 2025 ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது உள்ள அணியிலிருந்து 70 சதவீத வீரர்கள் நீக்கப்படுவார்கள் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ள வீரர்களில் 70 சதவீத வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார்கள்.
பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ஒன்றுமே செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுபோல விளையாடி இதுவரை நான் பார்த்ததே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான ஏலத்தை எதிர்கொண்டுள்ளது. சரியான வீரர்களை அந்த அணி வாங்கவில்லை. இந்த ஆண்டு அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அணிக்காக எதுவுமே செய்யவில்லை. நிறைய பதில்களை அவர்கள் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் வைத்து CSK-வை வீழ்த்திய SRH... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!