டீம் இந்தியாவில் பெரும் சர்ச்சை: 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்...' மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி..?
மீண்டும் அணியின் கேப்டனாக ஆசைப்படுகிறார் என்றால், அது எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால் மிகவும் அதிர்ச்சியாக இல்லை.
கடந்த ஆண்டு இந்திய அணிக்கு இனிப்பாகவும், புளிப்பாகவும் இருந்தது. கடந்த ஆண்டு சரியாக பாதி கடந்தபோது, ஒவ்வொரு இந்திய ரசிகரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் நிலைமை மாறி, எல்லாமே தலைகீழாக மாறியது.
ஆண்டு இறுதியில் காலெண்டரில் பேப்பர் காலியாவது போல் இந்திய அணியின் வெற்றியும் குறைந்தது. இதனால், புத்தாண்டின் முதல் நாளிலேயே, டிரஸ்ஸிங் ரூமில் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் மத்தியில், கேப்டன்ஷிப் பிரச்சினையும் சூடுபிடித்துள்ளது. 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்' என்று விராட் கோலியை நோக்கி விரல்கள் நீட்டப்படுகின்றன.
புதன்கிழமை, ஜனவரி 1, 2025 அன்று, மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிகவும் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது. டிரஸ்ஸிங் ரூமில் இருந்த அனைத்து வீரர்களையும் பயிற்சியாளர் கடுமையாகக் கண்டித்ததோடு, இப்போது எல்லோரும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது தவிர கேப்டன் பதவி தொடர்பாக தற்போது நிலவும் மோதல் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம்- இந்திய அணி நிர்வாகம் எடுத்த அதிரடி..! அட, பும்ராவுக்குமா..?
ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. சில வீரர்கள் அடுத்த கேப்டனாக கனவு காண்கிறார்கள். இருப்பினும், ரோஹித் சர்மா வெளியேறினால், ஜஸ்பிரித் பும்ரா அடுத்த டெஸ்ட் கேப்டனாக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர் துணை கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் கேப்டனாக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவரும் இதற்கு உரிமை கோரியுள்ளார். தன்னை 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்' என்று வர்ணித்துள்ளார். அதாவது நிலைமையை சரிசெய்யக்கூடியவர். இளம் வீரர்கள் இன்னும் முழுமையாக தயாராகாததால், சில காலம் கேப்டன் பதவியை கையாள முடியும் என்று இந்த வீரர் நம்புவதாக கூறப்படுகிறது.
இப்போது கேள்வி என்னவென்றால், இந்த சீனியர் 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்' யார்? தற்போது இந்திய அணியில் சீனியர் வீரர்களாக ரோஹித் தவிர, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். இதில், அடுத்த கேப்டனாக பும்ரா உறுதியாக உள்ளார். ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியில் அதிக அனுபவம் இல்லை. அவரது இடமும் கேள்விக்குறியாக உள்ளது. கே.எல்.ராகுலுக்கும் கேப்டன்சி அனுபவம் உள்ளது. ஆனால் முடிவுகள் நன்றாக இல்லை. அவரது இடமும் அணியில் உறுதி செய்யப்படவில்லை.
இந்ந்இலையில், விராட் கோலி மட்டுமே எஞ்சியிருக்கிறார். அவர் கேப்டன்சி போட்டியாளராகத் தெரிகிறார். கோஹ்லியின் கேப்டன்சி பற்றி எழுதவோ, சொல்லவோ தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த தொடரின் போது சில சந்தர்ப்பங்களில் களத்தில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டதால் கோஹ்லி இதைச் செய்ய வாய்ப்பு உள்ளது. பெர்த் டெஸ்டில் ரோஹித் இல்லாத நிலையில், பும்ரா முடிவுகளை எடுப்பதிலும், சில சமயங்களில் அவரே சில முடிவுகளை எடுப்பதிலும் தொடர்ந்து உதவினார்.
அதேபோல், மெல்போர்ன் டெஸ்டின் முதல் மற்றும் நான்காவது நாட்களில் பந்துவீச்சாளர்கள், பீல்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி அரை மனதுடன் ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் மீண்டும் அணியின் கேப்டனாக ஆசைப்படுகிறார் என்றால், அது எதிர்பாராததாக இருக்கலாம். ஆனால் மிகவும் அதிர்ச்சியாக இல்லை.
இதையும் படிங்க: மெல்போர்ன் டெஸ்ட்: மைதானத்தில் ஆஸி., வீரரைத் தாக்கிய விராட் கோலி... கொலைவெறியில் துடிக்கும் ரிக்கி பாண்டிங்..!