மீண்டும் கேப்டனாக முடிசூடிய தோனி... எத்தனை போட்டிக்கு..? ருத்ராஜின் நிலை என்ன..?
சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் அணியின் கேப்டம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சாமீபத்திய ஆட்டத்தில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: வானவேடிக்கை காட்டிய கே.எல்.ராகுல்... 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது DC!!
இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடந்துள்ளனர். மறுபுறம் தோனி எத்தனை போட்டிக்கு கேப்டனாக இருப்பார்? ருத்ராஜ் அணிக்கு திரும்புவாரா? அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நடப்பு தொடரில் சிஎஸ்கே அணி மொத்தமாக 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகளில் விளையாடி முடித்து நிலையில் மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் தோனி கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அந்தப் போட்டிகளிலும் தோனியே கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது. தோனியின் கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றது. 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஐந்து ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. மேலும், தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆகையால் ரசிகர்கள் தோனியின் கேப்டன்சி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி அணி... ரன்களை குவிக்க தடுமாறிய வீரர்கள்!!