×
 

கிங்னா சும்மாவா...ஒரே போட்டியில் லிஸ்ட் போட்டு சாதனை படைத்த கோலி!!

ஒரே தொடரில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

ஒரே தொடரில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அறையிறுதிக்கு சென்ற இந்திய அணி, குருப் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதியது. விறுவிறுப்புடன் எதிர்பார்த்த அரையிறுதியின் முதல் போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் ஃபீல்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க விடாமல் இந்திய அணியின் ஸ்பின்னர்ஸால் தடுமாறியது. 
பின்னர் லபுஸ்சாக்னே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார்.  ஷமி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது. 

இதையும் படிங்க: அபார வெற்றி.. மிரட்டலாக இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியா!!

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மா 28 பந்துகளில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த விராட்கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 30 ஓவர் முடிவில் இந்திய அணி 3விக்கெட் இழந்து 150 ரன்களை எடுத்திருந்தது. 42.4வது ஓவரில் ஜாம்பா வீசிய பந்தில் கோலி 84ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இந்த போட்டியின் மூலம் விராட் கோலி நாக் அவுட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர், சாம்ப்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் (735 ரன்கள்), சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்டுகள் பிடித்த வீரர் (336 கேட்சுகள்), ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் எடுத்தவர் (24 அரைசதங்கள்) உள்ளிட்ட சாதனைகளை இந்த ஒரேநாளில் நிகழ்த்தியுள்ளார். விராட்டின் இந்த இமாலய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நானா குண்டா இருக்கே....உருவக்கேலிக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ரோஹித்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share