'நோ… நோ… உலக சூப்பர் ஸ்டார்களான நாங்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலா…?' பிசிசிஐ-க்கு எதிராக கெத்துக்காட்டும் கோலி-கே.எல்.ராகுல்..!
விராட் கோலி, கே.எல். ராகுல் இந்த வீரரும் மறுத்துவிட்டார்கள். ரஞ்சி போட்டியில் விளையாட மாட்டார்கள்.
இந்திய அணி வீரர்கள் உள்நாட்டு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதை பிசிசிஐ சமீபத்தில் கட்டாயமாக்கியது. வேறு வழியே இல்லாமல், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல வீரர்கள் ரஞ்சி டிராபிக்கு தாங்கள் தயாராக இருப்பது குறித்து அந்தந்த அணிகளுக்குத் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஜனவரி 23 முதல் தொடங்கும் ரஞ்சியின் அடுத்த சுற்றில் கோஹ்லி விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரைத் தவிர, இந்த சுற்றின் போட்டிகளில் தானும் விளையாடப்போவதில்லை என கே.எல். ராகுலும் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார்.இரு வீரர்களும் வாரியத்திடம் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாகக் காரணம் கூறி இருக்கிறார்கள்.
விராட் கோலி கழுத்து வலியால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து அவர் இந்தக் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தொடர் முடிந்ததும், ஜனவரி 8 ஆம் தேதி அதற்கான மருத்துவத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரால் இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை. தனக்கு இன்னும் கழுத்தில் வலி இருப்பதாக கோலி பிசிசிஐ மருத்துவ ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால்தான் ஜனவரி 23 ஆம் தேதி சவுராஷ்டிராவுக்கு எதிரான அடுத்த ரஞ்சி போட்டியில் அவரால் விளையாட முடியாது. விராட் கோலி டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சி செய்தும் வருகிறார்.
இதையும் படிங்க: விராட்டின் கேப்டன்சியின் போது மாற்றப்பட்ட மனைவி-காதலி விதி... பிசிசிஐ பணத்தில் வெளிநாட்டில் கூத்தடித்த வீரர்கள்..!
மறுபுறம், கே.எல்.ராகுலுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜனவரி 23 ஆம் தேதி தனது சொந்த அணியான கர்நாடகா சார்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது. அவர் விரைவில் முதல் முறையாக தந்தையாகப் போகிறார்.பிசிசிஐ வெளியிட்டுள்ள 10 வழிகாட்டுதல்களில், வீரர்கள் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது நடக்கவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இருப்பினும், கோஹ்லி, ராகுல் அடுத்த சுற்றில் விளையாட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். ரஞ்சி டிராபியில் குழு நிலையின் இறுதிச் சுற்று ஜனவரி 30 முதல் ஜனவரி 2 வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும். இரண்டு வீரர்களும் அதில் இடம்பெறுவார்கள். ஆனால் இரண்டு போட்டிகளுக்கும் இடையே 3 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே, அவர்கள் விரும்பினால், ரஞ்சிக்கோப்பை இறுதிச் சுற்றில் பங்கேற்கலாம்.ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷுப்மான் கில், டெல்லி அணிக்காக ரிஷப் பந்த் மற்றும் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்ட விராட் கோலி... உண்மையை உடைத்து வீசிய உத்தப்பா..!