×
 

கவுண்டர் கொடுக்கும் கவுண்டி... ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் கோலி..?

கோலி ஐபிஎல் 2025 ன் சில போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.

ஆஸ்திரேலிய மைதானங்களில் ரன்களை குவிப்பதில் விராட் கோலி வல்லவர். ஆனால் அவரது சமீபத்திய சுற்றுப்பயணம் மிகவும் மோசமாக இருந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ​​அவரால் 23.75 சராசரியுடன் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 8 இன்னிங்ஸ்களிலும் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இதனால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் ரஞ்சி டிராபியில் விராட் கோலி விளையாட வேண்டும் என ஆலோசனை வழங்கியிருந்தனர். ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவார் கூறப்படுறது. ஆகையால், கோஹ்லி ஐபிஎல் 2025 ன் சில போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.

இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் பிரிவு 1 மற்றும் 2 போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெறும். அதே நேரத்தில், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்கும். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மோசமாக விளையாடிய கோலி அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனது செயல்திறனை மேம்படுத்த கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், பரிந்துரைத்திருந்தார்.

இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...

ஆனால், இதுவரை அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதை உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், கோலி போன்ற ஒரு நட்சத்திரம் ஐபிஎல்லை பாதியிலேயே விட்டுவிடுவது சற்று கடினமாகத் தெரிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதை ஒருபோதும் விரும்பாது. எனவே, விராட் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட மிகக் குறைவு.
 

இதையும் படிங்க: ‘என்னையா ஓய்வெடுக்கச் சொல்றீங்க..?’ மோசமான ஃபார்மிலும் வீராப்பு காட்டும் விராட் கோலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share