2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ அணிக்கும் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஆடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து தோல்வி தழுவியது. இதனால் ரசிகர்கள் கடிமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக பீல்டிங்கில் சொதப்பியதே இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே வீரர்கள் கேட்சை தவறவிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதனிடையே அணியின் கேப்டம் அதிரடியாக மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சாமீபத்திய ஆட்டத்தில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியிலிருந்து இந்த வீரர் நீக்கம்.. கம் பேக் கொடுத்த ஷேக் ரசீத்!!

இதனால் அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். தோனி கேப்டனான பிறகாவது இது மாறுமா என எதிர்பார்த்த நிலையில் கடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட சிஎஸ்கே வீரர்கள் கைக்கு வந்த கேட்சை தவறவிட்டனர். இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தொடரில் மிக சிறந்த கேட்ச் ஒன்றை சிஎஸ்கே வீரர் ராகுல் திருப்பாதி பிடித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து லக்னோ அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் லக்னோ அணியின் அதிரடி வீரரான ஏய்டன் மார்க்கரம் சிக்ஸ் அடிக்க முயன்ற பந்தை ராகுல் திருப்பாதி ஓடி சென்று கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் பில்டிங் கொஞ்சம் முன்னேறி இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #IPL2025: மண்ணை கவ்விய டெல்லி அணி..! மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி..!