ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டுபிளசிஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று டெல்லிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்றது. டெல்லி அணி வெற்றி பெறுமா என்று எண்ணிய நிலையில் இம்பேக்ட் பிளேயராக வந்த இளம் வீரரான அஷிதோஷ் அபாரமாக ஆடி டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து டுபிளசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் பேசுகையில், டெல்லி லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் அற்புதமான போட்டியாக அமைந்தது. பல கிரிக்கெட் வீரர்கள் பல ரசிகர்கள் ஐபிஎல் இருக்கும் புதிய விதி குறித்து புகார் அளிக்கிறார்கள். ஆனால் இந்த போட்டியை பார்த்த பிறகு புதிய விதி ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஐந்து விக்கெட்டுகள் விழுந்தவுடன் போட்டி அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் புதிய வீரர் ஒருவர் வந்து ஆட்டத்தை மாற்றிவிட்டார். நானாக இருந்தால் மசாலா டீ அருந்தி இதுபோல் இருக்கும் போட்டியை ரசித்துப் பார்ப்பேன்.
இதையும் படிங்க: IPL 2025: வயிற்றுக்குள் போன வெற்றியை கையை விட்டு எடுத்த வீரர்.. யார் இந்த விப்ராஜ் நிகம்.?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஆடுகளத்தை பார்த்தேன். பந்து கொஞ்சம் நிதானமாக தான் பேட்டிற்கு வந்தது. ஐந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு இந்த இலக்கை ஏற்றுவது முடியாத காரியம் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய பழைய மூளை போட்டி முடியும் வரை லீக் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பை விட்டு விலக மாட்டாய் என்று கூறியது. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வரும்போது அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்திய அணியில் பல வீரர்கள் அபாரமாக விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்த இரண்டு வீரர்களும் பந்தை வெகு தூரத்திற்கு அடித்தார்கள்.

இந்த போட்டியை பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது. மோகித் சர்மா அடித்ததிலேயே மிகவும் முக்கியமான ரன்னாக அவருடைய வாழ்க்கையில் இதுவாகத்தான் இருக்கும். மூத்த வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் பல கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. ஐபிஎல் பாணியை இதுதான் நான் ஒரு அணியில் நீண்ட காலம் தங்கி இருப்பேன். அதன் பிறகு ஏலம் நடக்கும் மீண்டும் புதிய அணிக்கு சென்று புதிய அத்தியாயத்தை தொடங்குது. சிஎஸ்கே அணியில் இருந்து ஆர்சிபிக்கு சென்றது ஒரு நல்ல அத்தியாயம் தான். ஆனால் தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன். இன்னும் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்பது புதிய அணியை பொறுத்துதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி அணி அபார வெற்றி... லக்னோ அணியை மிரளவிட்ட அஷிதோஷ்!!