2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் நேற்று ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணி, தொடகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தொல்வியடைந்தது.

இருந்தபோதிலும் தோனி இறுதி ஓவரில் அடித்த சிக்ஸர்கள் ரசிகளுக்கு ஆறுதலாக அமைந்தது. கடைசி ஓவரில் அவர் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். இதுமட்டுமின்றி அவர் தோனி ஐபிஎல் தொடரில் நான்காம் வரிசை மற்றும் ஐந்தாம் வரிசையில் அதிக ரன்களை குவித்துள்ளார். நான்காம் வரிசையில் 66 இன்னிங்ஸ்களில் 1559 ரன்களை சேர்த்திருக்கிறார். இதில் அவரது சராசரி 36.3 ஆகும். ஐந்தாம் வரிசையில் 73 இன்னிங்ஸ்களில் 1955 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் அவரது சராசரி 47.7 ஆகும்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!!

மேலும் இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 144.5 ஆக உள்ளது. இதற்கு அடுத்து ஆறாம் வரிசையில் 48 இன்னிங்ஸ்களில் 961 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் அவரது சராசரி 33.1 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் அபாரமாக உள்ளது. இவ்வாறு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகளுக்கு அறுதல் அளித்த தோனி, தற்போது ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் விதமாக நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 4687 ரன்கள் எடுத்திருந்தார். நீண்ட நாட்களாக அதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதை தற்போது தோனி முறியடித்திருக்கிறார். தோனி 236 போட்டிகளில் 4697 ரன்களை குவித்திருக்கிறார். இதன்மூலம் சுரேஷ் ரெய்னா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 2721 ரன்களுடனும் நான்காவது இடத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2433 ரன்களுடனும் உள்ளனர்.
இதையும் படிங்க: முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!