ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. மேலும் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதரும், கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக ரஹானேவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், போட்டியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் மேடையில் தோன்றிய பாலிவுட் ஸ்டாரான ஷாரூக் கான் ரசிகர்களை வரவேற்றார். பின்னர் பெங்காலைச் சேர்ந்த பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பத்மாவத் படத்தில் இடம்பெற்ற "கூமரு.. கூமரு" பாடலை பாடினார்.
இதையும் படிங்க: IPL 2025: இந்த வருஷமும் ஈசாலா கப் நம்தே கிடையாது.. பங்கம் செய்த ஆஸ்திரேலிய லெஜெண்ட்..!!

அதை தொடர்ந்து தமிழில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற ஜன கன மன.. ஜனங்களை நினை.. கனவுகள் வெல்ல என்று பாடியது தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது. பின்னர் ஓம் ஷாந்தி ஓம் பாடலை பாடிய அவர், இறுதியாக ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை பாடினார். கொல்கத்தா மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருடன் பாடத் தொடங்கினர். இவரது இசை நிகழ்ச்சிக்கு பின் பாலிவுட் நடிகை திஷா படானியின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் இருவரையும் மேடையில் ஷாரூக் கான் வரவேற்றார். அப்போது விராட் கோலி, இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் விளையாடி இம்பேக்ட் கொடுப்பேன் என்று தெரிவித்தார். இதன்பின் ரிங்கு சிங் - ஷாரூக் கான் இணைந்து நடனம் ஆடியதோடு விராட் கோலியையும் ஆட வைத்தனர். இதன்பின் ஐபிஎல் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே கோப்பையை மேடைக்கு கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 திருவிழா இன்று ஆரம்பம்... பிசிசிஐ அறிவித்த 4 புதிய விதிகள் என்ன..?