×
 

சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட பும்ரா.. கம்மென்றாகிய கான்ஸ்டஸ்..

சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட பும்ரா..

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு இங்கிலாந்தாக இருந்தாலும், இன்றைய தேதிக்கு கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் நாடுகள் என்றால் அது இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தான். தரத்திலும், தனத்திலும் இந்த இரண்டு அணிகளும் டாப் லெவல். ஒருகாலத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினால் எந்த அளவு பரபரப்பு தொற்றிக் கொள்ளுமோ அது இப்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதினால் ஏற்படுகிறது. அதுவும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான போட்டி என்றால் அனல் பறப்பது உறுதி. அதுதான் இந்த தொடரிலும் நடந்து வருகிறது. 

 

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது போட்டி ட்ராவில் முடிவடைய, மெல்பர்ன் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: ‘போதும் போதும்... உங்க விளையாட்டு...’ இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய கவுதம் கம்பீர்..!

 

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் ஒற்றை இலக்கத்திலும், இளம்புயல் ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் தேற்ற, இந்திய அணி 185 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. முதல்நாள் ஆட்ட நேரம் முடிய 15 நிமிடங்களே இருந்தது. விக்கெட் இழப்பின்றி முதல்நாளை முடித்துக் கொள்ள ஆஸ்திரேலியா திட்டமிட்டது.

இந்திய தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீசினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் இளம்வீரர் கான்ஸ்டஸ், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். 2-வது ஓவரை முகமது சிராஜ் வீசி முடித்தார். நேரத்தை கடத்துவதற்காக கவாஜா முன்னும் பின்னுமாக நடக்க 3-வது ஓவரை வீச வந்த பும்ரா டென்ஷன் ஆனார். எதற்காக கிரீசில் நிற்காமல் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என பும்ரா கேள்வி எழுப்பினார். அப்போது பாய்ந்து வந்த இளம்வீரர் கான்ஸ்டஸ், வேண்டுமென்றே பும்ராவை வம்புக்கு இழுத்தார். 

 

கவாஜாவை கேள்வி கேட்டால் நீ ஏன் குதிக்கிறாய் என்று பும்ரா சத்தம் போட அதற்கு செவிமடுக்காமல் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்தார் கான்ஸ்டஸ். அம்பயர் வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். அதுவரை பொறுமையாக இருந்த பும்ரா, ஃபுல்லர் பந்து ஒன்றை வீச, ஸ்லிப்பில் நின்ற கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் கவாஜா. 

 

கவாஜாவை விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கவாஜாவிடம் காண்பிக்காமல் கான்ஸ்டஸ் அருகே வேகமாக சென்று பார்த்தாயா? என்கிட்டயா வச்சிக்கிற என்ற கேட்கிற மாதிரி நின்றார் பும்ரா. இந்த ஒற்றை விக்கெட்டுடன் 9 ரன்களுடன் ஆஸ்திரேலியா அணி களத்தில் நிற்க முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: தட்டுக்கெட்டுப்போன ரோஹித்தின் நிலைமை..! நாலாபக்கமும் அடி... ஆனாலும் அதுக்கு இப்போ வாய்ப்பே இல்ல ராசாக்களா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share