‘சும்மா குதிக்க மாட்டேன்...’ விராட் கோலியின் கேரக்டரை பொசுக்கிய அஸ்வின்..!
விராட் தான் ஜாலியாக இருக்கிறார் என்று மக்கள் அடிக்கடி நினைத்துக் கொள்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து, அணியில் இருந்து விலகினார்.
‘‘ஒரு நாள் நான் எழுந்து பார்க்கும் போது எனக்குள் இருக்கும் படைப்பாற்றலுக்கு எதிர்காலமோ, அது முன்னேறி செல்வதற்கான இடமோ இல்லை என்று தெரிந்தது. அன்றுதான் நான் ஓய்வு பெற வேண்டும் என முடிவுக்கு வந்தேன். திடீரென எனக்குள் இருக்கும் படைப்பு திறனுக்கு முன்னேறிச் செல்வதற்கு இடமில்லை என்பதை உணர்ந்தேன். அதனாலேயே ஓய்வு பெற்றேன்’’ என தனது ஓய்வுக்கு காரணம் தெரிவித்துள்ள அஸ்வின், ஆடுகளத்தில் எப்போதும் ஆளுமையாகவே இருந்துள்ளார்.
அஸ்வின் தனது அனுபவங்களை 'ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி' என புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘‘நான் கடினமான ஆள் கிடையாது. விளையாட்டை ரசிக்கவில்லை என்பது ஒரு கட்டுக்கதை. நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் பல முறை, அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார். அத்தோடு அமைதியாகி விடுகிறார். விராட் கோலி எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் சும்மா குதிக்கிறார். அஷ்வின் மட்டும் சீரியஸாக இருக்கிறார். விராட் தான் ஜாலியாக இருக்கிறார் என்று மக்கள் அடிக்கடி நினைத்துக் கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: ஏமாற்றிய கேரம் பந்து... அம்மாவின் நோய்... அஸ்வினை நெகிழச் செய்த மோடியின் கடிதம்
நீங்கள் ஏன் எப்போதும் சீரியஸாக இருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். முதலில், நான் ஒருபோதும் சீரிஸயான நபராக இருந்ததில்லை. ஆனால் நாட்டிற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பந்து என் கையில் இருக்கும்போது, நான் செயல்பாட்டில் இருப்பதால் என் மனம் சிக்கிக்கொண்டது.
அடிக்கடி, நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, டிரஸ்ஸிங் அறையிலோ, விருந்தினர் பாக்ஸிலோ அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு பேட்டில் முத்தம் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியாது. சில நிலையை அடைந்த பிறகு, பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு அவர் முத்தமிடமாட்டேன். இதனால் அஸ்வின் மிகவும் கடினமானவராக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதை எனது புத்தகத்தில் கொண்டு வர விரும்பினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீத்தி நாராயணன். பள்ளி காலத்திலிருந்தே இருவரும் நண்பர்கள். வெகுகாலம் கழித்து இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் சந்தித்தனர். அப்போது அஸ்வின், ப்ரீத்தியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ப்ரீத்தியும் அஸ்வினின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த ஜோடி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. இப்போது இருவரும் இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர்.
தோனி பற்றியும் கூறியுள்ள அவர், ‘‘பெரும்பாலான அடிப்படையான விஷயங்களை தோனி சரியாக செய்வார். பெரும்பாலான மற்ற கேப்டன்கள், அடிப்படையான விஷயங்களைத் தவறவிடுவார்கள். இதனால்தான், ஆட்டம் அவர்களுக்குக் கடினமாகிறது.
ஒரு பந்துவீச்சாளரிடம் தோனி பந்தைக் கொடுக்கும்போது, உனக்கான ஃபீல்டிங்கை முடிவு செய்து, அதற்கேற்ப பந்துவீசு என்று சொல்வார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அழுகுனி ஆட்டம்..! ஜஸ்பிரித் பும்ரா சட்டவிரோத பந்துவீச்சு..? அழிவை ஏற்படுத்துவதால் பழியை சுமத்தும் ஆஸி..!